பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை518

709.பார்மேவு கின்ற பலருருவர்; பண்டரங்கர்;
பார்மேவு கின்ற படுதலையர் - பார்மேல்
வலஞ்சுழியைச் சேர்வர் மலரடிகள் சேர்வார்
வலஞ்சுழியைச் சேரவரு வார்.

53

710.வாரணிந்த கொங்கை உமையாள் மணவாளா,
வாரணிந்த கொன்றை மலர்சூடீ, - வாரணிந்த
செஞ்சடையாய் சீர்கொள் சிவலோகா, சேயொளியாய்
செஞ்சடையாய், செல்ல நினை.

54

711.நினைமால் கொண்டோடி, நெறியான தேடி
நினைமாலே, நெஞ்சம் நினைய - நினைமால்கொண்(டு)
ஊர்தேடி யும்பரால் அம்பரமா காளாஎன்(று)
ஊர்தேடி என்றுரைப்பான் ஊர்.

55


கூடியவர் என்றபடி.) சங்க அரவர் (‘சங்க’ என்னும் அகரம் தொகுக்கப்பட்டது.) அமரரும், அடியவரும் ஆகிய குழாத்தின் துதி ஆரவாரத்தை உடையவர். தழல் உருவர் - நெருப்புப் போலும் திருமேனியை யுடையவர். என்பார் - எனப்படுவார்.

709. குறிப்புரை: “பார்” மூன்றில் முதலது பல உலகங்கள். அவைகளில் மேவும் பலராவர் மக்கள், அசுரர், இராக்கதர், நரகர், தேவர், உருத்திரர் முதலியோர். கலப்பினால் அவர்களேயாய் நிற்பார்’ என்றவாறு. இடையது, பாழ் நிலம், ஈற்றது, நிலவுலகம். வலஞ்சுழி, சோழ நாட்டுத் தலம். ஈற்றடியில் வலம் சூழி - வெற்றியாகிய வட்டம். மூன்றாம் அடியில் உள்ள “வலஞ்சுழியைச் சேர்வார்” என்பதனை எழுவாயாக்கி, முதலிற் கூட்டுக.

710. குறிப்புரை: அடி-2.-ல் வார் அணிந்த - நீளமாகத் தொடுக்கப்பட்ட தனிச் சீரில் உள்ள வார் - நீர். ஈற்றடியில் சடை - வேர். ‘எப்பொருட்கும் செவ்விய வேராய் உள்ளவனே’ என்க. செல்ல நினை - நின் அடியார்களைக் கடைபோக நினை; ‘இடையிலே மறந்து விடாதே’ என்றபடி. “கடையவனேனை கருணையினாற் கலந்து ஆண்டுகொண்ட விடையவனே, விட்டிடுதி கண்டாய்”1 என மாணிக்க வாசகரும் விணப்பித்துக்கொண்டார்.

711. குறிப்புரை: அடி-2-ல் “மாலே” என்றது சிவனை விளித்ததே. மால் - பெரியோன். இப்பெயர் இடுகுறியாய்த் திருமாலைக் குறிப்பதாயினும் காரணங் கருதியவழி பெருமை யுடையோர் பலரையும் குறிப்பதே. இதனை முதற்கண் கொண்டு உரைக்க.


1. திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - 1.