பக்கம் எண் :

519சிவபெருமான் திருவந்தாதி

712.ஊர்வதுவும் ஆனேறு உடைதலையில் உண்பதுவும்
ஊர்வதுவும்மேல்லுரகம் ஊடுவர்கொல் - ஊர்வதுவும்
ஏகம்பம் என்றும் இடைமருதை நேசத்தார்க்
கேகம்ப மாய்நின்ற ஏறு.

56

713.ஏறேய வாழ்முதலே, ஏகம்பா, எம்பெருமான்,
ஏறேறி யூரும் எரியாடி, - ஏறேய
ஆதிவிடங் காகாறை கண்டத்தாய் அம்மானே,
ஆதிவிடங் கா;உமைதன் மாட்டு.

57


அடி-1-ல் நினை மால் - (உன்னையே) நினைத்தலால் உண்டாகிய மையல். நெறி - உன்னை அடையும் வழிகள். ‘நெஞ்சம் நினை நினைய’ என்க. “நினை மால் கொண்டு” எனப் பின்னுங் கூறியது, அடி-1-ல் கூறியதை மீட்டும் கூறிய அனுவாதம். அடி-3-ல் ‘ஊர் ஊர்’ என்னும் அடுக்குக் குறைந்து நின்றது. உம்பர் ஆர் - தேவர்கள் நிறைந்த. அம்பர் மாகாளம். சோழ நாட்டுத் தலம். என் ஊர் தேடி - எனது ஊரைத் தேடி வந்தவனே. ‘என்று இவள் உனது ஊரை (அம்பர் மாகாளத்தை)ச் சொல்வாள்’ என்க. இதில் பாடங்கள் பல திரிபுபட்டன. இதுவும் தலைவியது ஆற்றாமை கண்டு செவிலி தலைவனை எதிர்பெய்து கொண்டு கூறியது.

712. குறிப்புரை: இடை மருதை நேசத் தார்க்கே - திருவிடை மருதூரை விரும்பும் விருப்பம் உடைய இறைவற்கே. ஏகாரம் தேற்றம் இதனை முதலிற் கொண்டு, “என்றும்” என்பதை இதன்பின் கூட்டுக. ‘உண்பதுவும் உடைதலையில்’ என மாற்றுக. ‘மேல் ஊர்வதும் உரகம்’ என்க. ஊடுதல், இங்கே வெறுத்தல். ஊடுவர்கொல் - இவைகளை வெறுப்பாரோ! வெறார் (ஆயினும்) ஏறு - ஆண் சிங்கம் நரசிங்கம். கம்பமாய் நின்றது - நடுக்கம் உடையதாய் நின்றுவிட்டது. “நேசத் தார்க்கே” என்னும் ஏகாரத்தால், ‘இவ்வாறு மிக எளியாராய்க் காணப்படுகின்றவர்க்கே’ என, அவரது ஆற்றல் மிகுதி விளக்கப் பட்டது. திருமால் கொண்ட நரசிங்க அவதாரத்தைச் சிவபெருமான் சரபமாய்த் தோன்றி அழித்தமை புராணங்களில் காணப்படுவது.

713. குறிப்புரை: அடி-1-ல் ஏறு ஏய - தேவர்களில் ஆண்சிங்கம் போல ‘வாழ்கின்ற முதலே’ என்க தனிச்சீரில் ஏறு ஏய - உயர்வு பொருந்தக் ‘காறையை அணிந்த கண்டத்தை உடையவனே’ என்க. காறை - கழுத்தணி; அது விடக் கறையைக் குறித்தது. ‘அண்டத்தாய்’ என்பது பாடம் அன்று. அடி-3-ல் “ஆதிவிடங்கா” என்பதைக் ‘கண்டத்தாய்” என்பதன் பின்னர்க் கூட்டுக. ஆதி விடங்கன் முதற்கண் தோன்றிய சுயம்பு மூர்த்தி. ‘ஆதி விடம் உமைதன் மாட்டு கா’ என இயைத்து, ‘முற்காலத்தில் நீ உண்ட நஞ்சினை உமைக்குத் துன்பம் நேராதவாறு காப்பாற்று’ என உரைக்க.