பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை520

714.மாட்டும் பொருளை, உருவு வருகாலம்
வாட்டும் பொருளை, மறையானை, - மாட்டும்
உருவானைச் சோதி உமைபங்கார் பங்காம்
உருவானைச் சோதி; உரை.

58

715.உரையா இருப்பதுவும் உன்னையே; ஊனில்
உரையாய், உயிராய்ப் பொலிந்தாய், - உரையாய
அம்பொனே சோதி; அணியாரூர் சேர்கின்ற
அம்பொனே சோதியே, ஆய்ந்து.

59

716.ஆய்ந்துன்றன் பாதம் அடைய வரும் என்மேல்
ஆய்ந்தென்றன் பாச மலமறுத் - தாய்ந்துன்றன்
பாலணையச் செய்த பரமா, பரமேட்டி,
பாலணையச் செய்த பரம்.

60

717.பரமாய பைங்கண் சிரம்ஏயப் பூண்ட
பரமாய பைங்கண் சிரமே! - பரமாய

714. குறிப்புரை: அடி-1-ல் மாட்டும் பொருள் - எல்லாம் வல்ல பொருள். உருவு வருகாலம் - பிறப்பு வருங் காலம், அடி-2-ல் மாட்டும் பொருள் - அந்தப் பிறப்பிலே சேர்க்கும் பொருள். மாட்டும் உரு - நெருப்புப் போல விளங்கும் திருமேனி. நெருப்பை வளர்த்தலை ‘மாட்டுதல்’ என்றல் வழக்கு. சோதி உமை - அழகிய உமாதேவி. அடி-4-ல் உரு - திருமேனி, சோதி - (மனமே, நீ) ஆராய்; எண்ணு. உரை - துதி.

715. குறிப்புரை: உரையா - உரைத்து; துதித்து. ஊனில் உரையாய் - உடம்பினின்றும் எழுகின்ற சொல்லாய். உரையாய அம்பொன் - மாற்று உரைக்குப் பொருந்திய அழகிய பொன். இதன்பின் உள்ள ‘சோதி’ என்பதை இறுதியிற் கூட்டுக. அடி-4-ல் அம் பொன் - அழகிய இலக்குமி. ஏ சோதியே - ஏவிய ஒளிவடிவானவனே. ஏவுதல் - இங்கு, வாழ விடுதல். திருவாரூர், இலக்குமி, வழிபட்டதலமாகும். ஆய்ந்து சோதி - எனது உயிரை அலசித் தூய்மை செய்.

716. குறிப்புரை: அடைய - அடைவதற்கு. வரும் - விரும்பி வருகின்ற. என்மேல் ஆய்ந்து - என்னிடத்துப் படிந்துள்ள குற்றங்களை ஆராய்ந்து, அக்குற்றமாகிய, கட்டாம் மலங்களை அறுத்து. ‘ஆய்ந்து அளைய’ என இயையும். பரமேட்டி - முன்னோனாகிய இறைவன். அடி-4-ல் பால் - ஊழ்; வினை அணைய - அழியும் படி. பரம் - உனது கடமை ‘நன்று’ என ஒரு சொல் வருவித்து முடிக்க.

717. குறிப்புரை: “பரம்” மூன்றில் முதலது சுமை. இடையது பரம்பொருள். இறுதியது மேன்மை. முதற்கண் உள்ள “பைங்கண்