| ஆறடைந்த செஞ்சடையாய்! ஐந்தடைந்த மேனியாய்! ஆறுஅடைந்த செஞ்சடைஆய் அன்பு. | | 61 |
| 718. | அன்பே உடைய அரனே, அணையாத அன்பே உடைய அனலாடி, - அன்பே கழுமலத்துள் ஆடுங் கரியுரிபோர்த் தானே கழுமலத்து ளாடுங் கரி. | | 62 |
| 719. | கரியார்தாம் சேருங் கலைமறிகைக் கொண்டே கரியார்தாஞ் சேருங் கவாலி, - கரியாகி நின்ற கழிப்பாலை சேரும் பிரான்நாமம் நின்ற கழிப்பாலை சேர். | | 63 |
சிரம்” இறந்தாரது குழிந்தாழ்ந்த கண்களையுடை தலை. ‘அவைகளை ஏய (பொருந்த)ப் பூண்ட “சிரமே” என இயைக்க. இச் சிரம் - தலைமை இரண்டாம் அடியில் உள்ள, “பரமய சிரமே” - என்பதற்கு. ‘பரம் பொருளாக மதிக்கப் படுபவருள் தலையாயிவனே’ என உரைக்க. சிவபெருமானு டைய கண்கள் திங்களும், ஞாயிறுமாய் நிற்றல் பற்றி, ‘பைங்கண்’ எனப்படுதல் உண்டு. பரமாய ஆறு - மேலான நதி; ஆகாய கங்கையை. ஐந்து அடைந்த மேனி - ‘அயன், அரி; அரன், மகேசுரன், சதாசிவன்’ என்னும் மூர்த்தங்கள். “அன்பு” என்பதை ‘என் அன்பு’ எனக்கொண்டு, ஆறு அடைந்த செஞ்சடையை ஆய் - ‘முறைப்படி உன்னை வந்து பற்றிய செவ்விய மூலத்தை ஆராய்’ என உரைக்க. சடை - வேர்; மூலம். ‘ஆராய்’ என்றது. ‘ஆராய்ந்து அருள்செய்’ எனத் தன் காரியம் தோற்றி நின்றது. 718. குறிப்புரை: அடி-1-ல் ‘அந்’ என்னும் வட சொல் ‘அன்’ எனத் திரிந்து, அச்சத்தைக் குறிக்கும் ‘பே’ என்பதை அடுத்து நின்றது. அன்பே உடைய அரன். வேண்டாத அச்சத்தையுடைய உருத்திரன். வேண்டாத அச்சமாவது, கொடுமை நன்மையாதலை உணராமையால் கொள்கின்ற அச்சம். இஃது உயிர்கள்பால் உள்ளது. அணையாத - நெருங்கக் கூடாத. வன்பேய் - வலியபேய்களை. உடைய - சுற்றிலும் கொண்ட அடி-3-ல் கழுமல் - நிறைதல். அன்பே கழுமலத்துள் - அன்பே நிறைந்துள்ள உள்ளங்களில். ஆடும் - நடனம் புரிகின்ற. ஈற்றடியில் உள்ள கழுமலம் - சீகாழி. ஆடும் கரி - பொருந்தியுள்ள சான்று. உயிர்களின் செயல்கள் அனைத்திற்கும் சான்று. ‘அரனும், அனலாடியும், கரியுரி போர்த்தானும் ஆகிய அவனே கரி’ என்பாலதனை, “கழுமலத்துள் ஆடும் கரி” எனச் சிறப்பித்துக் கூறினார். 719. குறிப்புரை: “கரியார்” இரண்டில் முன்னது, ‘குற்றம் உடையவர்’ என்னும் பொருட்டாய்த் தாருகாவன முனிவரைக்
|