| 720. | சேரும் பிரான்நாமம் சிந்திக்க வல்லீரேல் சேரும் பிரான்நாமஞ் சிந்திக்கச் - சேரும்; மலையான் மகளை மகிழ்ந்தாரூர் நின்றான், மலையான் மகளை மகிழ்ந்து. | | 64 |
| 721. | மகிழ்ந்தன்பர் மாகாளஞ் செய்ய மகளிர் மகிழ்ந்தம் பரமாகி நின்றார் - மகிழ்ந்தங்கம் ஒன்றாகி நின்ற உமைபங்கர், ஒற்றியூர் ஒன்றாகி நின்ற உமை. | | 65 |
குறித்தது. பின்னது ‘சான்றாவார்’ என்னும் பொருட்டாய்ச் சான்றோரைக் குறித்தது. முதல் அடியில் ‘சேர்த்தும்’ என்னும் பிறவினைச் சொல் பிறவினை விகுதி தொகுக்கப்பட்டு, ‘சேரும்’ என வந்தது. கலை மறி - மான் கன்று. தனிச்சீரில் உள்ள “கரி” - சான்று. “கழிப்பாலை” இரண்டில் முன்னது சோழ நாட்டுத் தலம். பின்னது, ‘உன்னிடத்தில் உள்ள குற்றங்களை நீக்கும் பான்மையால்’ என்றபடி. ஐ, சாரியை. “சேர்” என்பதற்கு. ‘நெஞ்சே, நீ’ என்னும் எழுவாய் வருவிக்க. 720. குறிப்புரை: “சேரும் பிரான்” இரண்டில் முன்னது, யாவாராலும் அடையப்படும் கடவுளாகிய சிவ பெருமானைக் குறித்தது. பின்னது, ‘யாவரும் வந்து வணங்குகின்ற தலைவன்’ எனப் பொருள் தந்தது. இதன்பின் ‘என்னும்’ என்னும் பண்பு உருபு விரிக்க. ‘சிவபிரானுடைய பெயரைச் சிந்தித்தால் யாவாராலும் வணங்கப்படும் தலைமைப் பதவி கிடைக்கும்’ என்றபடி. “சித்திக்க” இரண்டில் முன்னது ‘நீவிர் சிந்தித்தால்’ எனவும், பின்னது, ‘யாவரும் நினைக்கும்படி’ எனவும் பொருள் தந்தன. ‘அவ்வாறு சிந்திப்பதற்கு அவன் யாண்டுறைவன்’ எனின், “ஆரூர் நின்றான்” என முடிக்க. உமை, கங்கை இருவருமே மலையரையன் மகளிர் ஆதலின். “மலையான் மகள்” இரண்டும் தனித் தனி அவருள் ஒவ்வொருவரைக் குறித்தது. 721. குறிப்புரை: மா காளம் - பெரிய ‘எக் காளம் என்னும் சின்னம். செய்ய - அதனை ஊத; ‘நீர் புறப்பட்டு வர’ என்றபடி. அம்பரம் - ஆகாயம்; வெளி ‘வெளியாகி நின்றார்’ என்பது, ‘ஆடையிழந்து நின்றார்’ என்பதாம். அங்கம் - உடம்பு. “உமை பங்கர்” என்பது அண்மை விளி. ஈற்றடியில் உள்ள “ஒன்றாகி” என்பது ‘ஒன்றுதல் உடையீராகி’ என்றபடி. உமை - உம்மை ‘உம்மை அன்பர் மகிழ்ந்து’ என மேலே கூட்டுக. ‘உமது உலாவில் மகளிர் பலர் உம்மைக் கண்டு மையல் கொண்டனர்’ எனப் பெருமானது அழகைப் புகழ்ந்தவாறு.
|