| 87. | தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும் எனக்கே அருளாவாறு என்கொல்? - மனக்கினிய சீராளன், கங்கை மணவாளன் செம்மேனிப் பேராளன், வானோர் பிரான். | | 44 |
| 88. | பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப் பிரானவன்தன் பேரருளே வேண்டிப் - பிரானவனை ‘எங்குற்றான்’ என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும் இங்குற்றான் காண்பார்க்(கு) எளிது. | | 45 |
ஆதலின், அவன் இவ்வாறு ‘பலிக்கு’ என்று ஊர் திரிவதில் ஒரு கருத்திருத்தல் வேண்டும்’ என்றபடி. அக்கருத் தாவது, உயிர்களின் வினையை நீக்குதலாம். 87. அ. சொ. பொ.: “அடியன்” என்பது தன்மை யொருமைப் பெயர். ‘தன்னை’ என்னும் இரண்டனுருபு தொகுத்தலாயிற்று. பிரிநிலை ஏகாரத்தை இதனுடனும் கூட்டுக. “எனக்கே” என்னும் பிரிநிலை ஏகாரம். பிறர்க் கெல்லாம் அருளினமையைக் குறித்தது. “அருளாவாறு” என்பதை நிகழ் காலத்ததாகவும், “கொல்” என்பதை ஐய இடைச் சொல்லாகவும் கொண்டு உரைப்பதும், அவற்றை முறையே எதிர்காலத்ததாகவும், அசை நிலை இடைச் சொல்லாகவும், மற்றும் “என்” என்பதை இன்மை குறித்து வந்த வினாவினைக் குறிப்புச் சொல்லாகவும் கொண்டு உரைப்பதும் ஆகிய இரு பொருளையும் கொள்க. அங்ஙனம் கொள்ளவே, பின்னர் உரைக்கும் உரையின் படி, ‘எனக்கு அருளாதொழியக் காரணம் இல்லை’ என்னும் துணிவுப் பொருளே வலியுடைத்தாய் நிலை பெறும். பின்னை உரைக்கு “எனக்கே” என்னும் ஏகாரம் தேற்றப் பொருட்டாம். ‘மனத்துக்கு’ என்பதில் அத்துச் சாரியை தொகுத்தலாயிற்று. சீர்- புகழ். பேராளன் பெருமை யுடையவன். இனி, ‘செம்மேனி உடையனாதலைக் குறிக்கும் பெயரை யுடையவன்; அப்பெயர் - சிவன் - என்பது’ என உரைப்பினும் ஆம்; “சிவன் எனும் நாமம் தனக்கே யுடைய. செம்மேனி எம்மான்’1 என்னும் திருமொழியையும் காண்க. 88. அ. சொ. பொ.: “பேணி, வேண்டி, என்று நீவிர் தேடுகிறீர்கள்; இங்கே என்போல்வார் சிந்தையினும் உற்றான்; (அஃதறிந்து) காண்பார்க்கு (க் காண்டல்) எளிது’ என்க. ‘அவனையே’ என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. பெருநெறி - மேலான நெறி. நோக்குதலையே “பெருநெறி” என்றார். ஆகலின், பெயரெச்சம் வினைப் பெயர் கொண்ட தாம். “நின்முகம் காணும் மருந்தினேன்”2
1. திருமுறை - 4.112.9. 2. குறிஞ்சிக் கலி - 24.
|