| 89. | எளிய(து) இதுஅன்றே! ஏழைகாள் யாதும் அளியீர் அறிவிலீர்; ஆ!ஆ! - ஒளிகொள்மிடற்(று) எந்தையராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த சிந்தையராய் வாழுந் திறம். | | 46 |
| 90. | திறத்தால் மடநெஞ்சே சென்றடைவ தல்லால் பெறத்தானும் ஆதியோ! பேதாய் - நிறுத்த இருவடிக்கண் ஏழைக் கொருபாகம் ஈந்தான் திருவடிக்கட் சேருந் திரு. | | 47 |
என்பதிற்போல, பேணுதல் போற்றிக் காத்தல். வேண்டுதல் - விரும்புதல். “பெருநெறி, பேரருள்” என அடை புணர்த்தமை, ‘ஏனை நெறிகள் எல்லாம் ஒருநெறியல்ல’ என்பதும், தோன்றுதற் பொருட்டு. ‘பெருநெறி’ எனப்படாமை, பிறப்பைக் கடத்தலாகிய பெரும் பயனைத் தாராமை பற்றியும், ‘பேரருள்’ எனப்படாமை, சிலர்க்குச் சில சிறு பயன்களைத் தந்த அளவிலே அற்றுவிடுதல் பற்றியுமாம். “என்பீர்கள்” என்பது. ‘என்று தேடுகின்றீர்கள் என்னும் பொருட்டாய் நிற்றலின், “பிரான் அவனை” என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. “என் போல்வார் சிந்தையினும் உற்றான்” என்பது, ‘உலகியல் வகையில் எளிராயினும் அன்புடையார் உள்ளத்தில் இருப்பவன் அவன் என்பதை விளக்கிற்று. ’இங்கு’ என்பது, ‘இங்கே, என அண்மை குறிக்க வந்தது.’அஃது அறிந்து’ என்பதும், ‘காண்டல்’ என்பதும் சொல்லெச்சமாய் எஞ்சி நின்றன. இவ்வாறன்றி, ‘எளிதாக’ என ஆக்கம் வருவித்து, ‘எளிதாக உற்றான்’ என முடிப்பினும் ஆம். 89. அ. சொ. பொ.: “ஒளிகொள் மிடற்று” என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. ‘இது எளியது அன்றே! ஏழை காள், யாதும் அறிவிலீர்; ஆ! ஆ! அளியீர்! என முடிக்க. அளீயீர் - இரங்கத் தக்க நிலையை உடையீர். ஆ! ஆ!, இரக்க இடைச் சொல் அடுக்கு. ஒளி, நீல ஒளி. ‘அறிகிலீர்’ எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். தனிச்சீரில் ளகர ஒற்றை நீக்கி அலகிடுக. 90. அ. சொ. பொ.: ‘நெஞ்சே, திருவை, (அடையும்) திறத்தால் அடைவதல்லால், பிறவகையில் பெறவும் ஆதியோ’ (உரியை ஆவையோ? ஆகாய்) என இயைத்து முடிக்க. (பிற வகையில் பெற நினைக்கும்) பேதையே, (அந்த நினைவை விடு) என்க. ‘அடையும்’ என்பதும், ‘பிறவகையில்’ என்பதும் ‘விடு’ என்பதும் சொல்லெச்சங்கள். அடையும் திறமாவது, அன்பு செய்தல். | அழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால், | அறிவரிது அவன்திரு வடியிணை யிரண்டும்.1 |
1. திருமுறை - 7.58.10.
|