பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை54

91.

திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும்
பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும்; - ஒருநாள்
இதுமதியென்(று) ஒன்றாக இன்றளவுந் தேரா(து)
அது,மதியொன் றில்லா அரா. 

48

 

92.

அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள்
விராவு கதிர்விரிய ஓடி - விராவுவதலால்
பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே?
தன்னோடே ஒப்பான் சடை. 

49

 

93.

சடைமேல்அக் கொன்றை தருகனிகள் போந்து
புடைமேவித் தாழ்ந்தனவே போலும், - முடிமேல்
வலப்பால்அக் கோலமதி வைத்தான் பங்கின்
குலப்பாவை நீலக் குழல். 

50


என்றது காண்க. நிறம் - அழகு. வடிக் கண் - மாவடுவின் பிளவு போலும்கண். ஏழை - பெண்.

91. அ. சொ. பொ.: திரு - அழகு. ஏன மருப்பு - பன்றிக் கொம்பு. “பெருமான்” என்பது தாப்பிசையாய், முன்னும் சென்று, இயைந்தது. ‘ஒரு நாளும், ஒன்றும் என்னும் இழிவு சிறப்பும்மைகள் தொகுத்தலாயின. ‘மதி’ இரண்டில் முன்னது திங்கள். பின்னது அறிவு. ஒன்றாக - ஒருதலையாக; நிச்சயமாக. தேராது - அறியாது. ‘அது யாது’ எனின், மதி (அறிவு) ஒன்று இல்லா (சிறிதும் இல்லாத) அரா. இது மயக்க அணி. “மதி ஒன்று இல்லா” என்றதனால், எள்ளல் பற்றிய நகை பிறந்தது.

92. அ. சொ. பொ.: அராவி - அரத்தால் தேய்த்து, அம் - அழகு. விராவு கதிர் - திங்களிலே பொருந்தியுள்ள கதிர்கள். விரிய ஓடி - எங்கும் பரவ ஓடி. விராவுதலால் - இடைஇடை செறிதலால். புரி - முறுக்கு. புரிந்தாற்போலாவே - முறுக்குண் டாற்போல இல்லையோ. ஏகாரம் எதிர்மறை வினாப் பொருட்டாய், ‘போல்கின்றன’ எனப் பொருள் தந்தது. தன்னோடே ஒப்பான் - தனக்குத் தானே ஒப்பானவன்.

93. அ. சொ. பொ.: “முடிமேல்” என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. கோல மதி - அழகிய திங்கள். பங்கு - இடப் பாகம், ‘பங்கின் உள்ள பாவை’ என்க. குலப் பாவை - உயர் குல மடந்தை, ‘அவன் சடைமேல் அணிந்த’ எனச் சுட்டுப் பெயரும், ஒரு வினைக் குறிப்புச் சொல்லும் வருவிக்க, கொன்றை - கொன்றைப் பூ. பூக்கள் பின்னர்க் காய்த்துப் பழத்தைத் தருதல் இயல்பாகலின், சுவை தருகனிகள்’