| 94. | குழலார் சிறுபுறுத்துக் கோல்வளையைப் பாகத்து எழிலாக வைத்தேக வேண்டா - கழலார்ப்பப் பேரிரவில் ஈமப் பெருங்காட்டிற் பேயோடும் ஆரழல்வாய் நீயாடும் அங்கு. | | 51 |
| 95. | அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத்(து) எங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே - செங்கண் திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த சிரமாலை தோன்றுவதோர் சீர். | | 52 |
| 96. | சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி நீரார்ந்த பேர்யாறு நீத்தமாய்ப் - போரார்ந்த நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான் காண்பார்க்குச் செவ்வேயோர் கார். | | 53 |
என்றார் கூந்தலுக்குக் கொன்றைக் கனி உவமையாகச் சொல்லப்படும். புடைமேவி - சடையின் மற்றொரு பக்கத்தில் பொருந்தி. சடை வலப்பால் உள்ளது. ‘வலப் பக்கம் சடையும், இடப் பக்கம் கூந்தலுமாய் இரு தன்மைப்பட்டுத் தோன்றாது, சடையில் உள்ள கொன்றையின் கனியே இடப்பக்கம் உள்ளது போலும் என ஒருமை கற்பித்தவாறு. இஃது இடத்திற்கு ஏற்ற உவமை. 94. அ. சொ. பொ.: குழல் ஆர் சிறு புறத்து - கூந்தல் புரளுகின்ற சிறிய முதுகையுடைய. கோல் வளை - திரண்ட வளை. இஃது இதனை அணிந்தவளைக் குறித்தது. ஏழில் - அழகு. ‘அழகுக்காக அவளை நீ ஆடும் அங்குக் கொண்டு செல்ல வேண்டா’ என்க. இப்பாட்டிற்குப் ‘பெருமானே’ என்னும் முன்னிலை வருவிக்க. கழல் - வீரர்கள் காலில் அணியும் அணி. ஆர்த்தல் - ஒலித்தல், ஆரழல் - அணுகுதற்கரிய நெருப்பு. 95. அ. சொ. பொ.: “செங்கன்” என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. ‘பங்கில்’ என ஏழாவது விரிக்க. ஒவ்வாதே - போலதே. ஏகாரத்தை வினாவாகவும், தேற்றமாகவும் கொண்டு, ‘ஒக்கும்’ என உடன்பாட்டுப் பொருளும், ‘ஒவ்வாது’ என எதிர்மறைப் பொருளும் இரண்டும் கொள்க. சிர மாலை - தலை மாலை. ‘பெருமானது சடாடவி செவ்வானம்போல விளங்க, அதில் அணியப்பட்ட வெண்டலை மாலையில் உள்ள தலைகள் பல, பல சந்திரர் செவ்வானம் எங்கும் தோன்றியது போல விளங்குகின்றன’ என்பதாம். தலை மாலை அவனது நித்தியத்துவத்தை விளக்குவதாகலின் அதனைப் புகழ்ந்தவாறு. சீர் - அழகு. 96. அ. சொ. பொ.: ‘போரார்ந்த பாம்பு கொண்டு நாண் அசைத்த நம் ஈசன் பொன்முடி’ என்று எடுத்து, முதற்றொட்டு
|