பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை56

97.

காருருவக் கண்டத்தெங் கண்ணுதலே எங்கொளித்தாய்?
ஓருருவாய் நின்னோடு ழிதருவான், - நீருருவ
மேகத்தாற் செய்தனைய மேனியான், நின்னுடைய
பாகத்தான் காணாமே பண்டு. 

54

 

98.

பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு,
கண்டங் கறுத்தவும் அன்றியே - உண்டு
பணியுறுவார் செஞ்சடைமேற் பால்மதியின் உள்ளே
மணிமறுவாய்த் தோன்றும் வடு. 

55


உரைக்க. தான், அசை, நாண் - அரை நாண். அசைத்த இறுகக் கட்டிய. பொன் - அழகு. தழைப்ப - மிகுந்திருக்க சேண் - வானுலகம். ‘அங்கு உலவி நீர் மிகுந்திருந்த யாறு’ என்க. நீத்தம் - வெள்ளம். “ஆய்” என்பது, ‘ஆயதனால்’ எனக் காரணப் பொருள் தந்தது. செவ் ஏய் ‘ஓர் கார் - செம்மை நிறம் பொருந்திய ஒரு மேகம் போலும். கொன்றை, கார் காலத்தில் பூப்பது. “கண்ணி கார் நறுங் கொன்றை” என்றது காண்க.1 எனவே, ‘கொன்றை மலரும், நீத்தமும் மேகத்தால் விளைந்தன போலத் தோன்றுகின்றன என்றபடி. மேகம் கரிதாயினும் இஃதோர் அதிசய மேகம் என்பதாம்.

97. அ. சொ. பொ.: ‘மாயோன், நின்னுடைய பாகத் தானாய் நின்னோடு ஓருருவாய் உழிதருவானாகவும், அவன் பண்டொருகால் காணாதபடி நீ எங்குச் சென்று ஒளித்தாய்’ என்க. “பாகத்தான்” என்றது, ஒருருவால் நின்றவாற்றை விளக்கியது. “எங்கு ஒளித்தாய்” என்றது, ‘அவனுக்கு இடம் அளித்து நின்றே ஒளிக்கவும் வல்லாய்’ என்றபடி.

98. அ. சொ. பொ.: படுகடல் - ஒலிக்கின்ற கடல், உண்டு - ‘உண்டமையால்’ என்க. பணி உறுவார் - பாம்பை அணிகல மாகப் பொருந்தியவர். ‘அவர் கறுத்தமையால்’ எனச் சினைவினை முதல்மேல் ஏற்றப்பட்டது. மணி மறுவாய் நீல நிறமான களங்கமாய் (த் தோன்றும் வடுவும் உண்டாகும்’ - என உம்மையும் ஆக்கமும் விரித்து முடிக்க) ‘யாம் களங்கமிலேம்’ என்று அவர் சொல்லினும், கண்டம் கறுத்ததை யேனும், ‘ஓர் உபகாரம் பற்றி’ எனலாம்; ‘காரணம் இன்றி, மதியினிடத்துத் தோன்ற இருக்கும் வடுவும் ஒன்று உண்டு’ என்க. ‘இவர் களங்கமிலார்வது எங்ஙனம்’ என்றபடி இதனை,

வார மாகித் திருவடிக்குப் பணிசெய் தொண்டர்

பெறுவ தென்னே?

ஆரம் பாம்பு; வாழ்வ தாரூர்; ஒற்றி யூரேல்

உம்ம தன்று;


1. புறம் - கடவுள் வாழ்த்து.