| 99. | வடுவன் றெனக்கருதி நீமதித்தி யாயின் சுடுவெண் பொடிநிறத்தாய், சொல்லாய்; - படுவெண் புலால்தலையின் உள்ளூண் புறம்பேசக் கேட்டோம்; நிலாத்தலையிற் சூடுவாய் நீ. | | 56 |
| 100. | நீயுலக மெல்லாம் இரப்பினும் நின்னுடைய தீய அரவொழியச் செல்கண்டாய்; - தூய மடவரலார் வந்து பலியிடார், அஞ்சி, விடவரவம் மேல்ஆட மிக்கு. | | 57 |
| , , , , , , , , , , , , , , , , , , , , , , , | | ஊருங் காடு; உடையும் தோலே | ஒண காந்தன் தளியு ளீரே.1 |
என்றதுபோல உரிமை பற்றிச் சொல்மாத்திரையால் பழித்தவாறாகக் கொள்க. நிறை மதிக்கன்றிப் பிறைக்குக் களங்கம் இன்மையால், “தோன்றும்” என்பதை எதிர்கால முற்றாகக் கொண்டு, ‘இப்பொழுது இல்லையேனும் பின்பு உண்டாக இருக்கின்றது’ என்றவாறாகக் கொள்க. 99. அ. சொ. பொ.: ‘சுடு வெண்பொடி நிறத்தாய், படு வெண் புலால் தலையினுள் ஊண் (பற்றிப் பிறர்) புறம் பேசக் கேட்டோம்; (அதனை) - வடு அன்று - எனக் கருதி நீ மதித் தியாயின், (வடுவாகாமைக் குரிய காரணத்தைச்) சொல்லாய்; நீ நிலாவைத் தலையிற் சூடுபவன்’ எனக் கூட்டி முடிக்க. நிறம் - மார்பு. படு - இறந்த. ஊண் - உண்டல், புறம் பேசுதல், ‘பழித்தல்’ என்னும் பொருட்டாகலின் அது, ‘ஊண்’ என்பதில் தொக்கு நின்ற இரண்டவதற்கு முடிபாயிற்று. வடு - குற்றம். நிலாக் கலைகட்கு அடையாளம் ஆதலின், அதனைத் தலை யில் சூடுதல், ‘எல்லாக் கலையும் வல்லவன்’ என்பதைக் காட்டும். ஆகவே, ‘நீ வடுவாவன செய்யாய்’ என்பது குறிப்பு. 100. அ. சொ. பொ.: “எல்லாம்” என்பதன் பின், ‘சென்று’ என்பதும், “கண்டாய்” என்பதன்பின், ‘ஏன்எனில்’ என்பதும் வருவிக்க. கண்டாய், முன்னிலையசை. விடம் - நஞ்சு. ‘விட அரவம் மிக்கு மேல் ஆடுதலால், மடவார் அஞ்சி, வந்து பலி இடார்’ என்க. ‘எம் அன்பினால் உன்னை, அறியாதார் போல நினைத்துச் சொல்கின்றேம்’ என்பதாம்.
1. திருமுறை - 7.5.9.
|