பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை58

101.

மிக்க முழங்கெரியும், வீங்கிய பொங்கிருளும்
ஒக்க உடனிருந்தால் ஒவ்வாதே? - செக்கர்போல்
ஆகத்தான் செஞ்சடையும், ஆங்கவன்தன் பொன்னுருவில்
பாகத்தாள் பூங்குழலும் பண்பு. 

58

102.

பண்புணர மாட்டேன்நான் நீயே பணித்துக்காண்
கண்புணரும் நெற்றிக் கறைக்கண்டா - பெண்புணரும்
அவ்வுருவோ? மாலுருவோ? ஆனேற்றாய் நீறணிவ(து)
எவ்வுருவோ நின்னுருவம் மேல். 

59

103.

மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல்
போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே! - மாலாய
கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோ(து)
அம்மான் திருமேனி அன்று. 

60


101. அ. சொ. பொ.: மிக்க எரி - அளவில் மிகுந்த தீ. எரியின் முழக்கம் ‘தமதம’ என்பது. வீங்கிய பொங்கு இருள் - பெருகிய, மிகுந்த இருள். ஒக்க உடன் இருத்தல் - சமமாக ஒருங்கிருத்தல், “ஒவ்வாதே” என்றதற்கு, மேல், “போலாதே” என்றதற்கு1 உரைத்தவாறு உரைக்க. செக்கர் - செவ்வானம். ஆகம் - உடம்பு. பண்பு - நிறம், ‘பண்பினால்’ என்னும் மூன்றனுருபு தொகுத்தலாயிற்று. ‘சடையும், குழலும் பண்பினால் எரியும், இருளும் உடன் இருந்தால் ஒக்கும்’ என்க. ஓருடம்பு இருவராய கோலத்தைப் புகழந்தவாறு

102. அ. சொ. பொ.: “கண்புணரும்” என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. “மேல்” என்பதை, மேலே, “பண்பு” என்பதனோடு இயைத்து, மேல் பண்பு - மேலே உள்ள தன்மை’ என உரைக்க. பணி - சொல்லியருள். “பணி” என்னும் ஏவல் முற்றினைப் பார்த்துக் காண்’ என்றது ஒரு நாட்டு வழக்கு. ஏவல் முற்றுக்கள் அந்த வழக்கில் இவ்வாறு வரும் என்க. இதில் கூறப்பட்ட பொருளின் விளக்கத்தை, மேல், “ஒருபால் உலகளந்த” என்னும் வெண்பாக்2 குறிப்பிற் காண்க. ‘நீறணிவ தாகிய நின்னுருவம் எவ்வுருவோ’ என்க. ‘இரண்டு உருவத் திலும் நீறு காணப்படுதலால், உன் உருவம் அறியப்பட வில்லை’ என்பது கருத்து.

103. அ. சொ. பொ.: “மாலாய” என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. மால் - மத மயக்கம். மா - காட்டு விலங்கு ‘கையையுடைய மாவாகிய களிறு’ என்க. கார் உரிவை - கரிய தோல். அன்று - 


1. வெண்பா - 38.

2. வெண்பா - 41