பக்கம் எண் :

59அற்புதத் திருவந்தாதி

104.

அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்
இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது? 

61

 

105.

ஏதொக்கும் ? ஏதொவ்வா(து) ஏதாகும் ஏதாகா(து)
ஏதொக்கும் என்பதனை யாரறிவார் - பூதப்பால்
வில்வேட னாகி விசயனோ டேற்றநாள்
வல்வேட னான வடிவு. 

62



உரித்துப் போர்த்த அன்று. விலங்கல் - மலை. “ஒவ்வாதே” என்பது, மேலேயும் வந்தது.1 யானைத் தோற் போர்வையைப் புகழ்ந்தவாறு.

104. அ. சொ. பொ.: அன்று - ஆட்படாது உலகியலில் இருந்த அன்று. இன்று - உலகியலின் நீங்கி ஆட்பட்ட பின்ன தாகிய இன்று. இரு நிலைகளிலும் உன் உருவத்தை நான் காண வில்லை யென்றால் எப்பொழுதுதான் நான் அதனைக் காண்பது? நீ சிவனுக்கு ஆள் - என்கின்றாயே; அவன் உருவம் எத்தகையது என வினைவுவார்க்கு நான் என்ன விடை சொல்லுவேன்’ என்றபடி “எவ்வுருவோ நும்பிரான்” என்பதில், உரு உடையவனை, ‘உரு’ என்றது உபசார வழக்கு. “எவ்வுருவோ” என்னும் ஓகாரத்தை, ‘ஏது’ என்பதனோடும் கூட்டுக. ஏது - எத்தகையது. ஆட்பட்ட பின் உருவத்தை ஒன்றாகக் காணவில்லை; கயிலையில் கண்டது ஓர் உருவம்; ஆலங்காட்டிற் கண்டது ஓர் உருவம்; அவரவர்கள் சொல்லக் கேட்பன பல உருவங்கள்; அவை கருதுவார் கருதும் உருவங்கள்; ஒருபால் உலகளந்த மாலும், ஒருபால் உமைய வளும் ஆகும் உருவம்; அரியும், அயனும் ஆய உருவம் முதலியன.2 ‘உருவ சிவன் தடத்த சிவனேயன்றிச் சொரூப சிவன் அல்லன்’ என்பதும்’தடத்த சிவனே கண்ணுக்குப் புலனாவன்; சொரூப சிவன் உணர்வுக்கு மட்டுமே புலனாவன்’ என்பதும் இதன் கருத்துக்களாகும். 

அருவும் உருவும் அறிஞர்க்கு அறிவாம்
உருவும் உடையான் உளன்.3
 

என்றது காண்க. “என்றுந்தான் எவ்வுரு” என்றது, நிலையான உரு எது’ என்று வினாவி அஃது இல்லை, என்றபடி.

105. அ. சொ. பொ.: “பூதப்பால்” என்பது முதலாகத் தொடங்கி உரைக்க. “பூதம்” என்றது மண்ணை; எனவே, “பூதப்பால்” என்றது, 


1. வெண்பா - 52.

2. வெண்பா - 18,33,41.

3. திருவருட்பயன் - 5.