| 106 | வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே நெடிதுலவி நின்றெறிக்குங் கொல்லோ - கடியுலவு சொன்முடிவொன் றில்லாத சோதியாய் சொல்லாயால் நின்முடிமேல் திங்கள் நிலா. | | 63 |
| 107. | நிலாவிலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல் உலாவி உழிதருமா கொல்லோ! - நிலாஇருந்த |
‘மண்ணுலகில்” என்றவாறு. “வேடன்” இரண்டில் முன்னது, ‘வேடம் பூண்டவன்’ என்றும், பின்னது. ‘வேட சாதியினன்’ என்றும் பொருள் தந்தன. விசயன் - அருச்சுனன். ‘போர் ஏற்ற நாள்’ என ஒரு சொல் வருவிக்க ஒக்கும் இரண்டில் முன்னது ‘நிகர்க்கும்’ என்றும், பின்னது, ‘பொருந்தும்’ என்றும் பொருள் தந்தன.”ஏது” ஐந்தில்! முன்னிரண்டும் வினாப் பெயர்; அடுத்த இரண்டும் ‘எத்தன்மையது’ என வினைக்குறிப்பு. ஈற்றில் உள்ளதும் வினாப் பெயரே. பின் வந்த “ஏதொக்கும்” என்பது. ‘எந்த விடை பொருந்தும்’ என்பதாம். வினாக்கள் முதல் அடியில் வந்தன. வல்வேட னாய்த் தோன்றினும் தேவ வடிவாய் இருந்ததோ, வேட வடிவாயே இருந்ததோ? அதனை அறிந்தவர் ஆர் என்றபடி. 106. அ. சொ. பொ.: “கடி உலவு.... சோதியாய்” என்றது விளி. அது, “சொல்லாய்” என்பதனோடு முடிந்தது. ஆல், அசை, கடி, உலவு சொல் - விளக்கம் அமைந்த சொல். அத்தகைய சொல் ஒன்றை முடிவாக இல்லாத சோதி. அஃதாவது, சொல்லால் அளவிட்டுச் சொல்ல முடியாத ஒளி “அலகில் சோதியன்”1 என்றது காண்க. சோதியாய் - ஒளியை உடையவனே. ‘நின் முடிமேல் திங்கள், பகலே நிலா எறிக்குங் கொல்லோ’ என இயைக்க. வடிவு - வட்டம் என்றது. ‘நின் முடிமேல் திங்கள் குறையுடையது’ - எனக் குறிப்பால் நகை தோற்றியவாறு. செங்கதிர் - ஞாயிறு. நெடிது உலவி நின்று - பகல் முழுதும் மறையாது உலவி நின்று. “எறிக்குங் கொல்” என்றது, சொல்லால் ஐயம் போலக் கூறினும், பொருளால் துணிவு உணர்த்தியதேயாம். ஓகாரம், சிறப்பு ‘நீ அணிந்துள்ள திங்கள் உலகத் திங்களன்று; அருளுருவத் திங்களாம்’ என்றபடி. “கனக மலை அருகே - போயின காக்கையும் அன்றே படைத்தது பொன் வண்ணமே”2 என்றாற் போல, ‘சிவனை அடைந்த பொருள்கள்யாவும் சிவமேயாதலல்லது வேறாகா’ என்பதனைக் குறிப்பால் உணர்த்தியதாம். 107. அ. சொ. பொ.: “நிலா இருந்த” என்பது தொடங்கிச் சென்று, “நிலா இலங்கு வெண்மதியை நேடிக் கொள்வான்”
1. பெரிய புராணம். 2. இந்நூல் - 41.
|