| செக்கரவ் வானமே ஒக்குந் திருமுடிக்கே புக்கரவங் காலையே போன்று. | | 64 |
108. | காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின் வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு; - மாலையின் தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை; மற்றவற்கு வீங்கிருளே போலும் மிடறு. | | 65 |
என்பதை, “அரவம்” என் பதன் பின்னரும். “போல்” என்பதை, “கொல்லோ” என்பதன் பின்னரும் வைத்து உரைக்க. “போல்” என்பது ‘போலும் என முற்றுப் பொருள் தந்தது, “பெறுவது - கொள்வாரும் கள்வரும் நேர்” என்பதில், “நேர்”1 என்பது போல, இனி ‘போன்ம்’ என்பதே பாடம் எனலுமாம். கொல், அசை, ஓகாரம், சிறப்பு. கொள்வான், வான் ஈற்று வினையெச்சம். செக்கர் அவ்வானம் - செம்மை நிறம் உடைய அந்தவானம். ‘புக்க’ என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. திருமுடிக்கே - திருமுடிக்கண்ணே; உருபு மயக்கம் “காலை” என்பதில் ஐ இரண்டாம் வேற்றுமை யுருபு. கால் - காற்று. ‘காற்றையே போன்று உலாவி உழிதரும்’ என இயையும். ‘அரவம் சடை முடியில் மிக விரைவாக ஊர்ந்து உழலுதல், அங்குள்ள நிலாவை, ‘எங்கே உள்ளது’ எனத் தேடி உழல்வது போல் உள்ளது’ என்றது தற்குறிப்பேற்ற அணி. “நிலா” இரண்டில் முன்னது திங்களின் ஒளி; பின்னது திங்கள். 108. அ. சொ. பொ.: காலை நேரம், அருளோதயத்தாலும், உதய சூரியனாலும் வானம்மிகச் சிவந்து தோன்றுதலால், அக்காலத்து வானம் சிவனது திருமேனிக்கும், உச்சி வேளை யில் சூரியன் வெண்ணிறமாய் நிற்றலால் வானமும் வெளிது ஆதலின், அக்காலத்து வானம் அவன் அணிந்துள்ள வெண்ணீற்றிற்கும், மாலையில் மறைகின்ற ஞாயிற்றின் கதிர்கள் பல திசைகளிலும் பல கம்பிகள் போல வீசுதலால் அவற்றின் தோற்றம் அவனது விரிந்த சடைக்கும், இரவு நேரத்தில் மிகுந்துள்ள இரவு மிகக் கரிதாய்த் தோன்றலின் அஃது அவன் கறை மிடற்றிற்கும் உவமையாயின. இவை மாலை யுவமை யணி. ‘காலை, பகல்’ என்பன அக்காலத்து வானத் தையும், ‘மாலை’ என்பது அக்காலத்துக் கதிர் வீச்சினையும் குறித்தன. மாலை - மயங்கும் மாலை. அந்தக் காலம். ‘மாலை யின் உரு’ என இயையும். தாங்கு உரு - தாங்கப்படும் உரு. வேலை - பொழுது. கடும் பகல் - மிக்க பகல்; நண்பகல். மற்று, அசை, “அவன்” என்பது சிவபிரானைச் சுட்டியது பண்டறி சுட்டு. வீங்குதல் - மிகுதல். சிவபிரானது திருமேனியது உறுப்பழகைப் புகழ்ந்தவாறு.
1. திருவருட் பயன் - 5.
|