| 109. | மிடற்றில் விடம்உடையீர், உம்மிடற்றை நக்கி மிடற்றில் விடங்கொண்ட வாறே! - மிடற்றகத்து மைத்தாம் இருள்போலும் வண்ணங் கரிதாலோ, பைத்தாலும் நும்மார்பிற் பாம்பு. | | 66 |
| 110. | பாம்பும் மதியும்; மடமானும், பாய்புலியுந் தாம்பயின்று தாழருவி தாங்குதலால் - ஆம்பொன் உருவடிவில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத் திருவடியின் மேய சிலம்பு. | | 67 |
| 111. | சிலம்படியாள் ஊடலைத் தான் தவிர்ப்பான் வேண்டிச் சிலம்படிமேற் செவ்வரத்தஞ் சேர்த்தி - நலம்பெற்(று) |
109. அ. சொ. பொ.: ‘மிடற்றில் விடம் உடையீர் நும் மார்பில் பைத்து ஆடும் பாம்பு வண்ணம் (நும்) மிடற்றில் மைத்து ஆம் இருள்போலும் கரிது; (அது) உம் மிடற்றை நக்கித் (தனது) மிடற்றில் விடம் கொண்டவாற்றாலோ?’ என இயைத்துப் பொருள் கொள்க. ‘உமது மிடற்றின் நிறமும், நும் மார்பில் ஆடும் பாம்பின் நிறமும் ஒன்றாய் இருக்கின்றதே’ என வியந்துரைத்தவாறு. பின் வந்த மிடற்றுக்கு, ‘தன்’ என்பது வருவிக்க. “உம்” என்பதை ஈற்றில் வந்த மிடற்றுக்கும் கூட்டுக. ‘விடம் கொண்டவாற்றால்’ என உருபு விரிக்க. ஓகாரம் தெரிநிலைப் பொருட்டு. மைத்து ஆம் - மையின் தன்மையுடையதாகிய. “பாம்பு வண்ணம் கரிது” எனப் பண்பின் வினை பண்பிமேல் நின்றது. ஆல், ஓ அசைகள். பைத்து - படத்தை உடையதாய். இது, ‘பை’ என்னும் பெயர் அடியாகப் பிறந்த வினைச்சொல். 110. அ. சொ. பொ.: இதனுள் “சிலம்பு” என்றது கழலையே குறித்தது, மாதொரு பாகமாம் வடிவில் சிவன் திருவடியில் மேயது கழலேயாகையால் ‘கழல் வீரம் உடையார்க்கே உரியது. முதல் இரண்டு அடிகளில் கூறியவாறு சிவபெருமான் பகைப் பொருள்களைத் தனது மேனியில் பகைதீர்த்துப் பயில வைத்தமையாலும், தாங்கற்கரிய கங்கையைத் தலையில் தாங்கினமையாலும் அவன் கழல் அணிதல் தக்கதே “பயின்று” என்பதை, ‘பயில’ எனத் திரிக்க. தாழ்தல் - வீழ்தல். “அருவி” என்றது கங்கையை. ‘பயின்று, தாங்குதலால் சிலம்பு ஆம்’ என இயைக்க. ஆம் - பொருந்துவதே. உரு - நிறம். ‘வடிவில் ஓங்கு கின்ற ஒளி’ என்க. சிவபிரானது எல்லாம் வல்ல தன்மையை வியந்தவாறு. பெருமான் புலித்தோலையே உடையனாயினும், மான் அதையே கண்டு, ‘புலி’ என்று அஞ்சும் ஆகலின், ‘அங்ஙனம் அஞ்சவில்லை’ என்பது கருத்து. 111. அ. சொ. பொ.: ‘செந்நிறத்தால் செக்கர் வானமும், சிவபெருமானது சடைமுடியும் ஒன்றை ஒன்று வெல்லப் பார்க்கும்
|