பக்கம் எண் :

63அற்புதத் திருவந்தாதி

எதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான்
முதிரா மதியான் முடி. 

68

112.

முடிமேற் கொடுமதியான், முக்கணான் நல்ல
அடிமேற் கொடுமதியோம் கூற்றைப் - படிமேற்
குனியவல மாம்அடிமை கொண்டாடப் பெற்றோம்
இனியவலம் உண்டோ, எமக்கு. 

69

113.

எமக்கிதுவோ பேராசை; என்றுந் தவிரா(து)
எமக்கொருநாள் காட்டுகியோ? எந்தாய் - அமைக்கவே


நிலையில், சிவபெருமான் உமாதேவியின் ஊடலைத் தவிர்க்க வேண்டி அவளது பாதங்களில் தனது முடியைப் பல முறை சேர்த்துதலால் அப்பாதங்களில் உள்ள செம்பஞ்சுக் குழம்பு பட்டுப் பட்டுச் சடைமுடி செக்கர் வானத்தை வென்று விட்டது’ என்பது இப்பாட்டின் திரண்ட பொருள், இஃது உவகைச்சுவை. இதனை, ‘சிருங்கார ரசம்’ என்பர் வட நூலார். அனைத்துச் சுவைகளையும் பக்திச் சுவைக்குத் துணையாகவே திருமுறைகள் கொள்ளும்.

செவ்வரத்தம் - செம்பஞ்சு. “செவ்வரத்தத்தில் சேர்த்தி’ என உருபு விரிக்க. “சேர்த்தி” என்றாரேனும், ‘சேர்த்திச் சேர்த்தி’ என அடுக்கிக் கூறுதல் கருத்தென்க. நலம் - அழகு. “பெற்று” என்பதில். ‘பெறுவித்து’ என்னும் பிறவினை விகுதி தொகுக்கப்பட்டது. செக்கர் - செவ்வானம் இதன்பின், ‘சிறக்க’ என ஒரு சொல் வருவிக்க. ‘முதிரா மதியான் தனது முடியைச் செவ்வரத்தத்தில் சேர்த்து நலம் பெறுவித்து இக்கோலம் செய்தான்’ என்க. மதி திங்களாயினும், ‘அறிவு’ என்றும் பொருள்தரும் ஆதலின், ‘ஒரு பெண்ணின் அடிகளில் பல முறை முடிதோய வணங்குகின்றான்’ என்னும் நகை நயம் தோன்ற அப்பொருள்மேற் செல்லும் குறிப்பும் உடையது.

112. அ. சொ. பொ.: கொடு மதி - வளைந்தபிறை. “வாலறிவன் நற்றாள்”1 என்பதன் உரையில், “பிறவிப் பிணிக்கு மருந்தாகலின் ‘நற்றாள்’ என்றார்” எனப் பரிமேலழகர் உரைத்த உரை இங்கு, “நல்ல அடி” என்பதற்குக் கொள்ளத்தக்கது. மேற் கொடு - தலைமேற் கொண்டமையால், ‘கூற்றை மதியோம்’ என்க. கூற்று, இறப்பைத் தரும் தெய்வம்; யமன். படி - பூமி, ‘படிமேல் பொருந்தத் தலை குனிய வல்லமாகிய அடிமைத் தன்மையைக் கொண்டாடப் பெற்றோம்’ ‘வல்லம்’ என்பது இடைக் குறைந்து நின்றது. கொண்டாடுதல் - பாராட்டுதல். அவலம் - துன்பம்.

113. அ. சொ. பொ.: எந்தாய், சடையாய், இரவில் நீ ஆடும் இடம் எமக்கு ஒருநாள் காட்டுதியோ? இதுவோ எமக்கு ஒரு


1. திருக்குறள் - 2