| 724. | அன்றமரர் உய்ய அமிர்தம் அவர்க்கருளி, அன்றவுணர் வீட அருள்செய் தான்; - அன்றவுணர் சேராமல் நின்ற அடிகள், அடியார்க்குச் சேராமல் நின்ற சிவம். | | 68 |
| 725. | சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்சேர்வ தாக்கும் சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்ணாம்; - சிவனந்தம் சேரும் உருவுடை யீர் செங்காட் டங்குடிமேல் சேரும், உருவுடையீர், செல். | | 69 |
| 726. | செல்லும் அளவும் சிதையாமல் சிந்திமின் செல்லும் அளவும் சிவன்உம்மைச் - செல்லும் திருமீச்சூர்க்(கு) ஏறவே செங்கண்ஏ றூரும் திருமீச்சூர் ஈசன் திறம். | | 70 |
724. குறிப்புரை: அன்று அவுணர் - பகைத்த அசுரர்; திரிபுரத்தவர். வீட - அழிய. அருள், மறக் கருணை. தனிச் சீரில், ‘உணர்வு’ என்பது, “உணர்” என முதல் நிலையளவாய் நின்றது. உணர்வு அன்றச் சேராமல் நின்ற அடிகள் - அறிவு மாறு பாடச் செல்லாதபடி செவ்வே நிற்கின்ற பெருமான்; ஈற்றடி யிலும், ‘சேர்வு’ என்பது, “சேர்” என முதனிலையளவாய் நின்றது. மல் - வளம். மங்கலம் அடியார்களுக்குச் சேர்வாக (ப்புகலிடமாக) மங்கலம் நிலைபெற்ற சிவம் என்க. அமரர்க்கு அருளித் திரிபுரத்தவர்க்கு மறக் கருணையே செய்தவனும், யாவர்க்கும் அவரது அறிவு கோட்டம் அடையாதபடி செம்மையனாய் நிற்கின்றவனும் ஆகிய பெருமான் அடியார்கட்குப் புகலிடமாய் நிற்கின்ற சிவமாய் உள்ளான்’ என்க. 725. குறிப்புரை: அடி-1-ல் அந்தம் செல்கதிக்கு - முடிவில் அடையக் கூடிய கதிக்கு; முத்திக்கு. ஓர் கண் - ஒப்பற்ற கண்; முத்தி நெறிக்கு ஒப்பற்ற கண்ணாவது ஞானம். ‘சேர்வதை ஆக்கும்’ என்க. அடி-2-ல் நம்தம் கதி - நம்முடைய கதி; நாம் அடையக் கூடிய கதி. அதற்குக் கண் ஆதலாவது, வழிகாட்டி யாய் நிற்றல். தனிச்சீரில் அந்தம் சிவன் சேரும் உரு உடையீர் - முடிவில் சிவனை அடையும் குறிக்கோளை உடையவர்களே. ஈற்றடியில் செல் உரு உடையீர் - நினைத்த இடத்தில் செல்லு தற்குரிய உடம்பைப் பெற்றவர்களே. ‘செங்காட்டாங்குடிமேல் சேரும்’ என முடிக்க. செங்காட்டாங்குடி, சோழ நாட்டுத் தலம். 726. குறிப்புரை: அடி-1-ல் செல்லும் அளவும் - இயலும் அளவும். அடி-2-ல் செல்லும் அளவும் - நீவிர் மேலே செல்லும் அளவும். “உம்மை” என்னும் இரண்டாவதை, ‘உம்மொடு’ என
|