பக்கம் எண் :

525சிவபெருமான் திருவந்தாதி

727.திறமென்னும் சிந்தை தெரிந்தும்மைக் காணும்!
திறமென்னும் சிந்தைக்கும் ஆமே? - திறமென்னும்
சித்தத்தீர் செல்வத் திருக்கடவூர் சேர்கின்ற
சித்தத்தீரே! செல்லும் நீர்.

71

728.நீரே, எருதேறும் நின்மலனார் ஆவீரும்
நீரே நெடுவானில் நின்றீரும் - நீரேய்
நெருப்பாய தோற்றத்து நீளாரம் பூண்டீர்
நெருப்பாய தோற்றம் நிலைத்து.

72


மூன்றாவதாகத் திரிக்க. மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. அடி-3-ல் ‘திருமீயச்சூர்’ என்பது “திருமீச்சூர்” எனக் குறைந்து நின்றது. இது சோழ நாட்டில் உள்ள ஒருதலம். ஏற - இதனை அடைய. ஏறு - இடபம். அடி-4-ல் திரு மீச்சு ஊர் - மங்கலம் மேற்பட்டு மிகுகின்ற ‘ஈசன்’ என்க.

727. குறிப்புரை: தனிச் சீர் முதலாகத் தொடங்கி யுரைக்க. திறத்தை யுடையது “திறம்” எனப்பட்டது. திறம் - வலிமை - ‘இடையூறுகளை யெல்லாம் கடக்கும்) வலிமையுடைய சித்தத்தை. (மனத்தை - அத்துச் சாரியை நிற்க ஐயுருபு தொக்க தனை இலேசினால்1 கொள்க.) ‘ஈர் திருக்கடவூர்’ என இயைத்து, ‘ஈர்க்கின்ற திருக்கடவூர்’ என வினைத் தொகை யாக்குக. “திருக்கடவூர் சேரும் சித்தத்தீரே” என்றது அத்தலப் பெருமானை விளித்தது. சித்தம் - உள்ளம். நீர் செல்லும் - உமது விருப்பம்போல நீர் திருக்கடவூர் செல்லும். அடி-1-ல் திறம் என்னும் சிந்தை - உண்மையில் வலிமையுடைய உள்ள மானது. உம்மைத் தெரிந்து காணும் - பல பொருள்களையும் விட்டு உம்மை ஆராய்ந்து அறியும். (அவ்வாறின்றி) திறம் என்னும் சிந்தைக்கும் ஆமே - ‘யான் வலிமை யுடையேன் என வாளா தற்பெருமை பேசிக்கொள்கின்ற உள்ளத்திற்கும் அது கூடுமோ? (கூடாது). ‘திறமையுள்ள உள்ளத்திற்கு அடையாளம் சிவபெருமானது பெருமையை உணர்ந்து அவனைப் பற்றுதலே’ என்றபடி.

728. குறிப்புரை: “நீரேய்..... பூண்டீர்” என்பதை முதலிற் கூட்டி, ‘எருதேறும் நின்மலனார் ஆவீரும் நீரே; நெருப்பாய தோற்றம் நிலைத்து நெடுவானில் நின்றீரும் நீரே’ என இயைத்து முடிக்க. தனிச் சீரில் ‘நீறு’ என்பது எதுகை நோக்கி “நீர்” என நின்றது. சிவபெருமானது திருமேனி இயற்கையில் நெருப்புப் போன்றதாய், அதன்மேல் நீறு பூசப்பட்டிருத்தலின் அதற்கு நீறு பூத்த நெருப்பு உவமையாயிற்று. ‘பூண்டு’ என்பது பாடம் அன்று. ஆரம், எலும்பு


1. தொல் - எழுத்து - தொகை மரபு - 15.