| 733. | ஈயும் பொருளே; எமக்குச் சிவலோகம் ஈயும் பொருளே! இடுகாட்டின் - ஈயும் படநாகம் பூணும் பரலோகீர்! என்னீர் படநாகம் பூணும் படி. | | 77 |
| 734. | படியேறும் பார்த்துப் பரத்தோடும் கூட்டி; படியேறு பார்த்துப் பரன்இப் - படிஏனைப் பாருடையாய்! பைங்கண் புலியதளாய்! பால்நீற்றாய்! பாருடையாய்! யானுன் பரம். | | 78 |
| 735. | பரமாய விட்டுநின் பாதம் பணிந்தேன் பரமாய ஆதிப் பரனே - பரமாய நீதியே நின்மலனே! நேரார் புரம்மூன்றும் நீதியே செய்தாய்; நினை. | | 79 |
733. குறிப்புரை: ‘உலகீர், நீவிர்’ என்பதை முதலில் வருவித்துக் கொள்க. ‘அடி-4-ல் பட - நீவிர் இறந்த பின்பு நாகம் பூணும்படி. புண்ணிய போகத்தை அடையுமாற்றிற்கு. (‘படிக்கு’ என நான்காவது விரிக்க.) அடி-1-ல் பொருள் ஈயும் - உங்கள் பொருளை வறியவர்க்கு ஈயுங்கள். (சிவபெருமானை) எமக்குச் சிவலோகம் ஈயும் பொருளே - ‘எங்களுக்குச் சிவலோ கத்தை ஈந்தருள்கின்ற பரம்பொருளே’ என்றும், (தனிச் சீரில் - ‘ஈ உம் இடுகாட்டின்’ - என மாற்றிக் கொள்க.) ஈ - வண்டு களின், உம் இடுகாட்டின் - உங்காரம் பொருந்தியுள்ள இடுகாட்டின்கண் ஆடுகின்ற. ‘பட நாகம் பூணும் பர போகீர்’ என்னீர் என்று சொல்லித் துதியுங்கள். 734. குறிப்புரை: “இப்படி” என்பது முதலாகத் தொடங்கி, அடி-2-ல் (யானோ) படி பார்த்து ஏறும் பரன் - (திடீரென மேலே பறப்பவன் அல்லன்.) படிகளைப் பார்த்து ஒவ்வொன்றாகக் கடந்து மேல் ஏறுகின்ற அயலான். (என்னை) பார்த்து படி ஏறும் பரத்தோடும் கூட்டி - உற்றுப் பார்த்துப் பார்த்துத் தாம் மிகுகின்ற உனது மேலான நிலையோடு சேர்த்தருள். அடைபவர் மேல் மெல்ல மெல்லச் சேர்த்தருள் - என்று ஏறும் தன்மையை அடையப்படும் பொருள்மேல் ஏற்றினார். “பார்த்துப் படியேறும் பரன்” - என்றது உயிர்களின் இயல்பை விளக்கியவாறு. ‘கூட்டுதி’ என்னும் ஏவல் வினை முற்றின் இகர விகுதி தகர ஒற்று இன்றி, “கூட்டி” என வந்தது. “நன்றுமன் அது நீ நாடாய் கூறி”1 என்பதிற்போல. 735. குறிப்புரை: இரண்டாம் அடியையும் அதன்பின் மூன்றாம் அடியில் உள்ள “நீதியே! நின்மலனே!” என்பதையும் முதலிற் கூட்டி
1. அகநானூறு - 268.
|