பக்கம் எண் :

529சிவபெருமான் திருவந்தாதி

736.நினையடைந்தேன் சித்தம் நிலையாகும் வண்ணம்
நினையடைந்தேன் சித்த நிமலா! - நினையடைந்தேன்;
கண்டத்தாய்! காளத்தி யானே கனலாரும்
கண்டத்தாய்! காவாலி! கா.

80

737.காவார் பொழிற்கயிலை ஆதி! கருவேஎம்
காவாய்ப் பொலிந்த கடுவெளியே - காவாய
ஏறுடையாய்! என்னை இடைமருதிலேஎன்றும்
ஏறுடையாய்! நீயே கரி.

81

738.கரியானும் நான்முகனு மாய்நின்ற கண்ண!
கரியாருங் கூற்றங் கனியே - கனியாரும்

யுரைக்க. “பரம்” மூன்றில் முதலது, பாரம்; பற்றுக்கள். ஏனையவை மேன்மை. நேரார் - பகைவர். அடி-4-ல் ‘தீயே’ என்பது “தியே” எனக் குறுகி நின்றது. “திருந்தார்நன் றென்றென் தியேன்1 - என்பதிற் போல. ‘தீயே செய்தாய்; அதனை நினை’ என்க ‘அமரர்கள் நின் பாதம் பணிய முப்புரத்தை எரித்ததை நினைக’ என்றது, ‘அதுபோலப் பாதம் பணிந்த எனது மும்மலங்களை நீக்கியருள்’ என்பது குறிப்பு.

736. குறிப்புரை: சித்த நிமலா - எல்லாம் வல்ல சித்தனாகிய நிமலனே! தனிச் சீரில் அடையுந் தேன் கண்டத் தாய் - உனது திருமுன்பில் வந்த தேன் கலந்த இறைச்சித் துண்டத்தை (கண்ணப்பர் படைத்தது) ஏற்றவனே. ‘அடையும்’ என்னும் பெயரெச்சத்தில் உகரம் கெட்டது. கனல் ஆரும் கண் - நெருப்புப் பொருந்திய கண்ணையுடைய. ‘தந்தாய்’ என்னும் விளிப் பெயர் வலிந்து நின்றது. காவாலி - கபாலியே, அடி-2-ல் ‘நினை அடைந்தேன்; என முன்னர்க் கூறினமையால் அடி-1-ல் “நினையடைந்தேன்” என்பது ‘எனது’ என்னும் அளவாய் நின்றது.

737. குறிப்புரை: அடி-1-ல் “கா” என்பது இளமரக் காக்களையும், “பொழில்” என்பது பெருமரச் சோலைகளையும் குறித்தன. கரு - மூலப் பொருள். அடி-2-ல் கா - கற்பகத் தரு. கடு வெளி - தூய்மையான ஆகாயம். சிதாகாசம். தனிச் சீரில், ‘அங்கா’ என்பது முதல் குறைந்து “கா” என நின்றது. ‘அங்காக் கின்ற வாயை உடைய ஏறி (இடபம்) என்க. வேறு - தனிச் சிறப்புடைய அடியவனாக இடை மருது - திருவிடை மருநூர். கரி - எல்லாவற்றுக்கும் சான்று.

738. குறிப்புரை: கண் - பார்வை; இங்கு அருள் நோக்கினைக் குறித்தது. ‘அருள் நோக்கினால் அரி, அயன் இவர்களது தொழிலை


1. யாப்பருங்கலக்காரிகை உதாரணம் - ஆறடிப் பஃறொடை வெண்பா.