பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை530

காடுடையாய்! காலங்கள் ஆனாய் கனலாடும்
காடுடையாய்! காலமா னாய்.

82

739.ஆன்ஆய ஆய அடலேறே ஆரூர்க்கோன்
ஆனாய னாவமுத மேயானாய் - ஆனாய்
கவர்எலும்போ(டு) ஏந்தி கதநாகம் பூணி
கவலெலும்பு தா;கை வளை.

83

740.வளைகொண்டாய் என்னை மடவார்கள் முன்னே;
வளைகொண்டாய்; மாசற்ற சோதி - வளைகொண்டாய்

நடத்துவிக்கின்றான்’ என்பது கருத்து. தனிச்சீர் ஒழித்து, இரண்டாம் அடியில் ஏனைய பகுதியை இறுதிக்கண் கூட்டுக. அதன்கண், ‘கூற்று’ (வாக்கு) என்பது. “கூற்றம்” என வந்தது. “குறித்தேன் கூற்றம்”1 எனத் தொல்காப்பியரும் கூறினார். கரி ஆரும் கூற்றம் - உண்மை நிறைந்த வாக்கு. உண்மை மொழியே சான்றாகக் கொள்ளப் படும் ஆதலின் அதனைக் “கரி ஆரும் கூற்றம்” என்றார். உண்மை மொழி, ஞானோபதேசம். கனி - வெளிப்படுத்து, ‘வழங்கு’ என்றபடி. ஏகாரம், தேற்றம். தனிச் சீரில், கரி யானை, அஃது ஐராவதத்தைக் குறித்தது. ஐராவதம் வழிபட்ட காடு வெண்காடு; திருவெண்காடு, கனல் ஆடும் காடு - முதுகாடு. ஈற்றடியில் காலம் (காளம்) - நஞ்சு. ஆனாய் - (கண்டத்தினின்று) நீங்காய்.

739. குறிப்புரை: அடி-1-ல் உள்ள ஏகாரத்தைப் பிரித்து, ‘அடல் ஏறு ஆன் ஆயனே ஆய ஆரூரன் ஆனாய்’ எனக் கூட்டி ‘வலிமை பெருந்திய இடபம், ஆன் நிரைமேய்த்த ஆயன் ஆகிய மாயோனேயாக உடைய, திருஆரூர்த் தலைவன் ஆகியவனே’ என உரைக்க. அடி-2-ல் ‘அன்னாய்’ என்பது இடைக் குறைந்து “அனாய்” என நின்றது. அன்னாய் - பல்லுயிர்க்கும் தாயே! உயிர்கட்கெல்லாம் அமுதம்போல இருப்பவனே. தனிச் சீரில் உள்ள “ஆனாய்” என்பதை மூன்றாம் அடி இறுதியிற் கூட்டி, ‘இவ்விடத்தை விட்டு நீங்காய்’ என உரைக்க. அடி-3-ல் கவர் எலும்பு - பிளவுபட்ட எலும்புகள். ஏந்தி - ஏந்தினவனே. பூணி - பூண்டவனே. அடி-4-ல் உள்ள தொடரை, ‘எலும்பு கையினின்றும் கவர்ந்த பிரிநிலைப் பொருளவாய் வந்த ஏகாரங்கள் உயர்வு குறித்து நின்றன. வளையைத் தா’ என இயைத்து முடிக்க. ‘தசை மெலிந்த, அழகிழந்த கை’ என்றற்கு ‘எலும்புக்கை’ என்றாள். ‘தார்’ என்பது பாடம் அன்று. இதுவும் கைக்கிளைத் தலைவி ஆற்றாமையைத் தோழி இறைவற்குக் கூறிக் குறையிரந்தது.

740. குறிப்புரை: “மாசற்ற சோதி” என்பதை முதலிற் கொண்டு, அதன்பின், முதல் அடியில் உள்ள தொடரை, ‘என்னை மடவார்கள்


1. தொல், சொல் - கிளவி யாக்கம்.