| மாற்றார் கதுவ மதில்ஆரூர் சேர்கின்ற மாற்றார் ஊர்கின்ற மயல். | | 84 |
| 741. | மயலான தீரும் மருந்தாகும்; மற்றும் மயலானார் ஆரூர் மயரார் - மயலான கண்ணியர்தம் பாகர் கனியேர் கடிக்கொன்றைக் கண்ணியன்றன் பாதமே கல். | | 85 |
| 742. | கலைமான்கை, ஏனப்பூண் காண்கயிலை மானின், கலைமான் கறைகாண் கவாலி, - கலைமான ஆடுவதும், பாடுவதும், காலனைப்பொன் அம்பலத்துள் ஆடுவதும் ஆடான் அரன். | | 86 |
முன்னே வளை கொண்டாய்’ என மாற்றிக் கூட்டுக. “வளை கொண்டாய்” என்பது, ‘மெலிவித்தாய்’ என்னும் பொருட்டாதலின். “என்னை” என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. அடி-2-ல் வளை கொண்டாய் வளைத்துக் கொண்டாய்; அகப்படுத்திக் கொண்டாய். தனிச் சீரில் வளை - சங்கு; வெற்றிச் சங்கு. ‘வெற்றிச் சங்கை உடன் கொண்டு (கைப்பற்றும் முறைகளை) ஆராய்கின்ற மாற்றார் (பகைவர்கள்) கதுவும் (முற்றுகை யிடுகின்ற; ஆயினும் கைப்பற்ற இயலாத) மதில்’ என்க. ஆரூர் சேர்கின்ற (திருவாரூரைச் சென்று சேரவேண்டும் என்று எழுகின்ற) ஆர்ந்து (நிறைந்து) ஊர்கின்ற (மீதூர்கின்ற) மயல் (மையலை) மாற்று - நீக்கு. இதுவும் மேலைத் துறை. ஒற்றுமை பற்றித் தலைவியையே தோழி “என்னை” என்றார். 741. குறிப்புரை: மயல், நோக்கத்தால் புலப்படுதல் இயல் பாகலின் இது கண்களை மயலை உடையன போல வைத்து, “மயலான கண்ணியர்” என்றார். இத்தொடர் மகளிரைக் குறித்தல் சொல்ல வேண்டா. பாகு ஆர் - அவர்கட்குச் சருக்கரையை ஒத்தவன். கனி ஏர் - மற்றும் கனியையும் ஒப்பவன். கடி - நறுமணம். கண்ணி - முடியில் அணியும் மாலை. “கடிக்கொன்றைக் கண்ணியான்” என்பது.. ‘சிவன்’ என்னும் அளவாய் நின்றது. கல் - போற்றக் கற்றுக்கொள். (நெஞ்சே. நீ’ - என்பது வருவித்துக் கொள்க.) ஏனெனில், அவையே மயல் ஆன - உலகத்தைப் பற்றி மயக்கங்கள் பலவும் தீர்தற்கு உரிய மருந்தாகும். மற்றும் - மேலும். மயல் ஆனார் - சிவபெருமானைப் பற்றிய ஆசை நீங்காதவர்கள். ஆரூர் மயரார் - அவனது திருவாரூரை மறக்க மாட்டார்கள். 742. குறிப்புரை: கலை மானை ஏந்திய ஏனத்தின் (பன்றியின்) கொம்பாகிய பூண் இவற்றுடன் காணப்படுகின்ற கயிலைப் பெரியோனால் (மான் - பெரியோன்). அடி-2-ல் மான் (நின் மகள்) கலைக் கறை - ஆடைபற்றிய குற்றத்தில். கவாலி -
|