743. | அரனே! அணியாரூர் மூலட்டத் தானே! அரனே! அடைந்தார்தம் பாவம் - அரனே! அயனார்தம் அங்கம் அடையாகக் கொண்டாய்; அயனாக மாக அடை. | | 87 |
744. | அடையுந் திசைஈசன் திண்டோளா காசம் அடையுந் திருமேனி; அண்டம் - அடையும் திருமுடிகால் பாதாளம்; ஆடைகடல் அங்கி திருமுடிநீர்; கண்கள்சுடர் மூன்று. | | 88 |
அவனேயாயினார். (அஃதாவது, உடையில்லாதவள் ஆயினாள். ஆடையின் குற்றம் - ஆடை அணியாமை. (“கவாலி” என்பதன் பின் ‘ஆயினாள்’ என்பது எஞ்சி நின்றது. இனி) அரன் - அவன். பொன் அம்பலத்துள் கலைமான, ஆடற்கலையும், பாடற்கலையும் பெருமையுறும் வண்ணம் ஆடுவதும், பாடுவதும் (அல்லது இவளை நோக்குகின்றான் இல்லை. நோக்காவிடினும் இவளது உயிரைக் கொள்ளாத படி) காலனை (யமனை) ஆடுவதும் ஆடான் அழித்தலையும் செய்யான். (நாம் என் செய்வது!) ஈற்றடியில் ‘அடுவது, அடான்’ என்பன முதல் நீண்டு நின்றன. இது தலைவியது வேறுபாடு கண்டு வினவிய நற்றாய்க்குச் செவிலி அறத்தொடு நின்றது. 743. குறிப்புரை: “அரன்” மூன்றில் முதலது ‘சிவன்’ என்னும் அளவாய் நின்றது. இடையது ‘அறன்’ என்பது எதுகை நோக்கித் திரிந்த பெயர். அறன் - அறவடிவினன்; இறுதியது, அரிப்பவன். மூன்று பெயர்களுமே விளி ஏற்று நின்றன. அயனார் - பிரம தேவர். ‘அவரது அங்கம்’ என்றது, தலை ஓட்டினை, அடி-3-ல் ‘அடையாளம்’ என்பது, “அடை” எனக் குறைந்து நின்றது. ஈற்றடியில் உள்ள தொடரை, ‘அயல் ஆக அடை நாகம்’ என மாற்றி, ‘அதற்கு மேல் உனது திருமேனியில் அணியப்படும் பொருள் பாம்பு ஆகின்றது. (‘அஃது எதற்கு’ என்பது குறிப்பெச்சம்.) 744. குறிப்புரை: ‘ஈசனது திண் தோள்திசை அடையும்; திருமேனி ஆகாசம் அடையும். திருமுடி (சிறப்பு வாய்ந்த சிரச) அண்டம் அடையும். கால் பாதாளம் (அடையும்) அவனுக்கு ஆடை கடல். “தூநீர் - வளைநரல் பௌவம் உடுக்கையாக, விசும்பு மெய்யாகத் திசை கையாக”1 எனப் பழம் புலவரும் கூறினார், அங்கி (அக்கினி) போலும் அழகிய சடா மகுடத்தில் நீர் (உள்ளது.) கண்கள் மூன்று சுடர்’ - என இயைத்துக் கொள்க. பெருமானது திருவடிவைப் புகழ்ந்தவாறு. “அடையும்” என்பதைப் “பாதாளம்” என்பதோடும் கூட்டுக.
1. நற்றிணை - கடவுள் வாழ்த்து
|