பக்கம் எண் :

533சிவபெருமான் திருவந்தாதி

745.மூன்றரணம் எய்தானே! மூலத் தனிச்சுடரே
மூன்றரண மாய்நின்ற முக்கணனே! - மூன்றரண
மாய்நின்ற சோதி! அணியாரூர் சேர்கின்ற
ஆய்நின்ற சோதி! அறம்.

89

746.அறமாய்வ ரேனும் அடுகாடு சேர
அறமானார் அங்கம் அணிவர்; - அறமாய
வல்வினைகள் வாரா வளமருக லாரென்ன;
வல்வினைகள் வாராத வாறு.

90

747.ஆறுடையர்; நஞ்சுடையர்; ஆடும் அரவுடையர்;
ஆறுடையர் காலம் அமைவுடையர்; - ஆறுடைய

745. குறிப்புரை: “மூன்று அரணம்” மூன்றில் முதலது முப்புரம். இடையது (அரணம் - பாதுகாவல்) மும்மூர்த்திகள். இறுதியது (அரணம் - சரீரம்) தூலம், சூக்குமம், காரணம் ஆகிய சரீரங்கள். “சோதி” இரண்டில் முன்னது, பொதுவில் ‘ஈசுரன்’ என்றும், பின்னது. சிறப்பாகச் ‘சிவன்’ என்றும் பொருள் பயந்தன. தூல சூக்கும் காரண சரீரங்களில் நின்று அறிவைப் பயப்பிக்கும் ஈசுரனை முறையே, ‘விராட், தைச்சன், மகேசுரன்’ எனக் குறியிட்டு வழங்குவர் வேதாந்திகள். ஈற்றடியில் ஆய் நின்ற - நுணுகி நின்ற. “சோதி” என்பனவும் விளிகளே. ‘நீயே அறம்’ என எழுவாய் வருவித் துரைக்க. எனவே, ‘உன்னை வணங்குதலே அறம்’ என்றபடி.

746. குறிப்புரை: “மருகலார்” எனப் பின்னர் வருதலால் முன் இரண்டடிகளும் அவரைப் பற்றியவேயாயின. மருகல், சோழநாட்டுத் தலம். அறம் ஆய்வர் - அற நூலை ஆராய்ந்து விளங்குவார். அறங்களில் ஆசாரம் அல்லது தூய்மையும் ஒன்று ஆகலின். ‘அறம் ஆய்வரேனும் அங்கம் (எலும்பை) அணிவர்; இஃது அவர்க்குப் பொருந்துமோ’ என ஐயுற்றார் போலக் கூறினார். தூய்தல்லாத பொருளைப் பற்றிய போதிலும் அதனால் நெருப்பு வாதிக்கப்படாமைபோல, அவர் எதனாலும் வாதிக்கப்படாமை கூறியவாறு. அடு காடு - சுடு காடு. அறம் ஆனார் - அறுதியாயினார். தனிச் சீரில் உள்ள அறம். சிவதருமம், அது செய்தற்கு அரிதாகலின். “வல்வினைகள்” என்றார். வாரா - வரப்பெற்று. ஈற்றடியில் உள்ள வல்வினைகள், வலிய இருவினைகள். ‘அவை வாராதவாறு சிவதருமம் வாய்க்கப் பெற்று, வளப்பம் பொருந்திய ‘திருமருகலர்’ எனச் சொல்லித் துதிக்க. “என்ன” என்பது அகர ஈற்று வியங்கோள். ‘என்க’ எனப் பாடம் ஓதலும் ஆம்.

747. குறிப்புரை: “ஆறு” மூன்றில் முதலது கங்கை. இடையது. ‘ஆறு’ என்னும் எண், இறுதியது, ஆறுதல்; சாந்தம். காலம் ஆறு. பூசா