| சித்தத்தீர் செல்வத் திருக்கயிலை சேர்கின்ற சித்தத்தீர் எல்லார்க்குஞ் சேர்வு. | | 91 |
748. | சேர்வும் உடையா செழுங்கொன்றைத் தாரார்;நஞ் சேர்வும் உடையர்; உரவுடையர் - சேரும் திருச்சாய்க்காட் டாடுவரேல் செய்தக்க, என்றும் திருச்சாய்க்காட் டேநின் உருவு. | | 92 |
749. | உருவு பலகொண்(டு) ஒருவராய் நின்றார்; உருவு பலவாம் ஒருவர்; - உருவு பலவல்ல; ஒன்றல்ல; பைஞ்ஞீலி மேயார் பலவல்ல; ஒன்றா ப் பகர். | | 93 |
750. | பகரப் பரியானை மேல்ஊரா தானைப் பகரப் பரிசடைமேல் வைத்த - பகரப் |
காலங்கள். அமைவு - நிறைவு; திருப்தி. இஃது எண் குணங்களில் வரம்பில் இன்பமாகும். ‘ஆறுதலுடைய சித்தத்தீர்யாவர் அவர் “ஆறுடையர்” முதலாகச் சொல்லப் பட்ட அவரது திருக்கயிலை சேர்கின்ற சித்தத்தீர் ஆவீர்; அத்திருக்கயிலையே எல்லார்க்கும் சேர்வு’ (புகலிடம்) என முடிக்க. 748. குறிப்புரை: “சேர்வு” இரண்டில் முன்னது சேரும் இடம். அவை பல தலங்கள் பின்னது, அடைக்கலமாக அடைதல். அவர், ‘திருச்சாய்க்காடு’ என்னும் தலத்தில் ஆடுவர் (விளங்கியிருப்பார்) ஆயின், (நெஞ்சே, நீ) செய்தக்கது என்றும் நீன் உருபு (உடம்பை) திருச்சாய்க் கட்டு (நன்றாய வணக்கத்தில் ஏ (ஏவுதலே) பின்னுள்ள “சாய்க்காடு” என்பதில் உள்ள காடு, ‘நோக்காடு, வேக்காடு’ முதலியவற்றிற் போலத் தொழிற் பெயர் விகுதி. அது வேற்றுமைப் புணர்ச்சியில் ஒற்று இரட்டிற்று. ஏ - ஏவுதல்; முதனிலைத் தொழிற் பெயர். 749. குறிப்புரை: “பைஞ்ஞீலி மேயார்” என்பதனை முதலிற் கொள்க. பைஞ்ஞீலி. சோழநாட்டுத் தலம். அடி-1-ல் ‘பலகொண்டும்’ எனவும், அடி-2-ல் ‘பலவுமரம்’ எனவும். அடி-3-ல் பலவும். ஒன்றும்’ எனவும் போந்த உம்மைகள் தொகுக்கப்பட்டன உருவு பல ஆம் ஒருவர் - பொருள்கள் பலவும் ஆகின்ற ஒருவர். அவரது உருவு பலவும் அல்ல. ஒன்றல்ல; (எனவே, ‘உருவே இல்லாதவர்’ என்பதாம்) அவரைக் குறிக்கும் சொற்கள் பல அல்லவாக, ஒன்றாக (நெஞ்சே, நீ) பகர். 750. குறிப்புரை: அடி-1-ல் பகர் அப் பரி யானை மேல் ஊராதான் - யாவரும் உயர்த்துச் சொல்கின்ற பருத்த யானையை
|