| பரியானைச் சேருலகம் பல்லுயிர்க ளெல்லாம் பரியானைச் சேருலகம் பண். | | 94 |
751. | பண்ணாகப் பாடிப் பலிகொண்டாய் பாரேழும் பண்ணாகச் செய்த பரமேட்டி! - பண்ணா எருத்தேறி ஊர்வாய்; எழில்வஞ்சி எங்கள் எருத்தேறி ஊர்வாய்; இடம். | | 95 |
752. | இடமாய எவ்வுயிர்க்கும் ஏகம்பம் மேயார் இடமானார்க்(கு) ஈந்த இறைவர், - இடமாய ஈங்கோய் மலையார், எழிலார் சிராமலையார், ஈங்கோய் மலையார் எமை. | | 96 |
ஊர்தியாகக் கொண்டு அதன்மேல் ஊர்தல் இல்லாதவன் ‘இடபத்தையே ஊர்கின்றவன்’ என்பதாம். அடி-2-ல் விளக்கத்தை. ‘பகரம் என்றல் உலகு வழக்கு. பரி சடை, ‘பரிக்கின்ற சடை’ என வினைத்தொகை. தனிச் சீரில் பகரம் - ‘ப’ என்னும் எழுத்து. அது பாம்பைக் குறிப்பால் சுட்டியது. அடி - பரியான் - தூல நிலையைக் கொண்டவன்; ‘உருவு கொண்டு நின்றவன்’ என்றபடி. ‘விளக்கமான, கங்கை முதலியவற்றைத் தாங்கியுள்ள சடையின்மேல் வைத்த பாம்பைக் கொண்ட உருவுகொண்டு விளங்குபவன்’ என்க. அடி-3-ல் சேர் உலகம் - பலவாய்த் திரண்டுள்ள உலகங்கள். அடி-4-ல் பரியான் - (அறியாமையால்) அன்பு செய்யப் படாதவன். அவனைச் சேர்ந்துள்ள உலகமே; சிவலோகம்; பண் - தகுதி வாய்ந்ததாகும். (ஆகவே. ‘அதனை அடையவே மக்கள் முயல வேண்டும்’ என்பது குறிப்பெச்சம். 751. குறிப்புரை: அடி-1-ல் பண் - இசை. பலி - பிச்சை. அடி-2-ல் பண் - தகுதி. செய்த - ஆக்கிய; படைத்த. அடி-3-ல் ‘எருது, “எருத்து” என ஒற்றிரட்டி நின்றது. தனிச் சீரில் பண்ணா - ஏறுதற்கு உரிய வகையில் அமைத்து. ‘எருத்துப் பண்ணா ஊர்வாய்’ என மாற்றிக் கொள்க. அடி-4-ல் எருத்து - எருத்தம்; பிடரி ‘எங்கள் எழில் வஞ்சிதன் எருத்து இடமாக ஏறி ஊர்வாய்’ என மாற்றி யுரைக்க. வஞ்சி - கொடி போன்றவள். இஃது எருதேறில் பிச்சைக்கு வந்த இறைவனைத் தலைவிதன் ஆற்றாமை கண்ட தோழி குறையிரந்தது. ‘எருது என்பன பாடம் அல்ல. “வஞ்சி, எருத்தேறி ஊர்வாய்” என்றது ‘இவளை உன்னிடத்துப் பணிகொண்டருள்’ என்றபடி. 752. குறிப்புரை: “எவ்வுயிர்க்கும்” என்பதை முதலிற் கூட்டுக. “ஏகம்பம் மேயார்” என்பது, ‘இறைவர்’ என ஒரு சொல் நீர்மைத்தாய் நின்று. “இடமாய்” என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று. அடி-2-ல் ஆனார் - நீங்காதவர், ‘உள்ளத்தால் நீங்காதவர்’ என்க. ‘தம்மை உள்ளத்தால் என்றும் நீங்கா தவர்க்குத்தம்மை
|