756. | உறுமுந்த முன்னே உடையாமல், இன்னம் உறுமுந்த முன்னே யுடையா - உறுமும்தம் ஒரைந்(து) உரைத்துஉற்று உணர்வோ(டு) இருந்தொன்றை ஒரைந் துரைக்கவல்லார்க் கொன்று. | | 100 |
தனி வெண்பா | ஒன்றைப் பரணர் உரைத்தஅந் தாதிபல; ஒன்றைப் பகரில் ஒருகோடி; ஒன்றைத் தவிராது உரைப்பார் தளரா; உலகில் தவிரார் சிவலோகந் தான். |
திருச்சிற்றம்பலம்
தொண்டை நாட்டுக் கடற்ரைத் தலம்; பின்னது, பொருந்தி ஊர்கின்ற இடபம், (உன்னைத் தவிர எமக்கு) ‘ஆரும் உறவு இல்லை’ என்க. உறும் - பொருந்தும் ‘அதனால் அதன் மேல் நீ வந்து அருள்’ என்பது குறிப்பெச்சம். 756. குறிப்புரை: தனிச்சீர் முதலாகத் தொடங்கி யுரைக்க. தனிச்சீரில் - உறுமும் - சினந்து வருகின்ற. தம் ஓர் ஐந்து - தங்கள் ஐம்புல ஆசைகளை. உற்று - நேர்ந்து. உரைத்து - அவைகட்கு அறிவுரை கூறி (அவை கேட்கும் தம்மையில ஆயினும் தமக்குள் தாம் சொல்லிக் கொள்வதை அவைகள் கேட்பனபோல வைத்துக் கூறினார்.) உணர்வோடு இருந்து - மெய்யறிவோடு அமைதியாய் இருந்து. ஒன்றை - ஒன்றாகிய செம்பொருளை. ஓர் ஐந்து உரைக்க வல்லார்க்கு - அஞ்செழுத்தால் துதிக்க வல்லார்க்கு. ஒன்று - அந்தச் செம் பொருள். அடி-1-ல் முன்னே - முதற்கண். உடையாமல் உந்த உறும் - அவ்வைம்புல ஆசைகட்குத் தோலாமல், அவர்களை முன்னோக்கிச் செலுத்த முற்படும். இன்னம் - அதற்குமேல். அடி-2-ல் முன் உடையாமுந்த உறும் - அவர்களது ஆற்றல் (அறிவு இச்சை செயல்கள்) சலியாதபடி முற்காப்பாக எப்பொழுதும் பொருந்தியிருக்கும். ‘அஞ்செழுத்தை ஒருமித்த மனத்துடன் ஓதுபவர்க்கு முதலில் அருட்பேறும். பின்னர் ஆனந்தப் பேறும் உளவாம்’ என்றபடி. இவ்வெண்பாவின் ஈற்றடி “ஒன்று” என முடிந்து முதல் வெண்பாவின் முதலோடு சென்று மண்டலித்தல் காண்க. தனிவெண்பா - குறிப்புரை: இறுதியிற் காணப்படும் வெண்பா நூற்பயன் சொல்வதாகப் பிற்காலப் பெரியோரால் செய்து சேர்க்கப் பெற்றது.
|