பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை540

வெண்பா

758.மாறு தடுத்த மணிக்கங்கை திங்களின்
கீறு தடுப்பக் கிடக்குமே? - நீறடுத்த
செந்தாழ் வரையின் திரள்போல் திருமேனி
எந்தாய்நின் சென்னி இடை.

2

கட்டளைக் கலித்துறை

759.இடைதரில் யாம்ஒன் றுணர்த்துவது உண்டிமை யோர்சிமையத்(து)
அடைதரு மூரிமந் தாரம் விராய்நதி வெண்ணிலவின்
தொடைதரு துண்டங் கிடக்கினும் தொண்டர் ஒதுக்கியிட்ட
புடைதரு புல்லெருக் குஞ்செல்லு மோநின் புரிசடைக்கே.

3


மாலைக் கடவுள் போற்றி” - என்னும் திருவாசத்தையும் காண்க. ஒலியல் - மாலை. மாறு, மூன்றாவதன் பொருள்படுவதோர் இடைச்சொல்.

758. குறிப்புரை: தனிச்சீர் முதலாகத் தொடங்கி உரைக்க. “செவ்வரை” என்பதில் செம்மை, ஆகு பெயராய் நெருப்பைக் குறித்தது. நீறு அடுத்த செம்மை - நீறு பூத்த நெருப்பு. பெருமான் திருமேனி முழுதும் திருநீறு பூசப்பட்டுள்ளது.

தாழ்வன - தங்கியுள்ள (அசையாது நிற்கின்ற) மலை. திரள் - திரட்சியான வடிவம். மாறு - எதிர். ‘மாறாத’ என ஆக்கம் விரிக்க. தடுத்த - தடுக்கப்பட்ட. உலகை அழிக்க எண்ணி வந்த எண்ணத்திற்கு எதிராகத் தடுக்கப்பட்ட கங்கை என்க. ‘சடையால் தடுக்கப்பட்ட கங்கை சிறிதும் கீழே ஒழுகாதபடி பிறை தடுத்து நிற்கின்றது போலும் எனத் தற்குறிப்பேற்றமாகக் கூறி வியந்தவாறு. ஒழுகும் தன்மை உடைய தாகிய கங்கையை ஒழுகாது வைத்துள்ள தன்மையை.

“நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை”1 என அப்பரும் வியந்தவாறு காண்க. ஏகாரம், வினாப் பொருட்டு.

759. குறிப்புரை: இடைதரின் - வாய்ப்பு அளித்தால். ‘உனக்கு உணர்த்துவது’ என்க. சினமயம் - கோபுரம். அஃது ஆகுபெயராய் அதனையுடைய நகரத்தைக் குறித்தது. மூரி - பெரிய மந்தாரம். தேவலோகத்துப் பஞ்ச தருக்களில் ஒன்று. அஃது இங்கு அதன் பூவைக் குறித்தது. தொடை - மாலை. நிலவின் மாலை, நிலாக் கதிர்கள். ‘மந்தார மலர்கள், நதி பிறை இவைகளோடு கூட உனது


1. திருமுறை - 6.43.1.