அகவற்பா 760. | சடையே, நீரகம் ததும்பி நெருப்புக்கலிக் கும்மே! மிடறே, நஞ்சகம் துவன்றி, அமிர்துபிலிற் றும்மே! வடிவே, மிளியெரி கவைஇத் தளிர்தயங் கும்மே! அடியே, மடங்கல்மதம் சீறி, மலர்பழிக் கும்மே! அஃதான்று, இனையஎன் றறிகிலம் யாமே; முனைதவத் தலைமூன்று வகுத்த தனித்தாள் கொலையூன்று குடுமி நெடுவே லோயே. | | 4 |
வெண்பா 761. | வேலை முகடும் விசும்பகடும் கைகலந்த காலைநீர் எங்கே கரந்தனையால் - மாலைப் பிறைக்கீறா கண்ணுதலா பெண்பாகா ஐயோ இறைக்கூறாய் எங்கட் கிது. | | 5 |
அடியார்கள் இடுகின்ற புல்லிய எருக்கம் பூவும் உனது சடை முடிக்குப் பொருந்துமோ’ என்க. ‘அன்பர் இடுவன யாதாயினும் அதுவே பெருமானுக்கு மிகு விருப்பத்தைத் தருவது என்றபடி. 760. குறிப்புரை: ஈற்றயலடி முதலாகத் தொடங்கிஉரைக்க. மூன்று தலைகளையும், ஒற்றைக் காலையும் உடைய வேல் திரிசூலம். ஊன்றுதல் - சேர்த்தல். குடுமி - முனை - ‘சடை முதலாகச் சொல்லப்பட்டவற்றில் ஒவ்வொன்றும் தோற்றத் திலும், செயலிலும் நேர்மாறாய் உள்ளன. ஆகவே, அவைகளை எத்தன்மையுடையன - ஒரு பெற்றியவாகத் துணிய எங்களால் இயலவில்லை’ என்பதாம். முளி எரி - பிற பொருள்களை யெல்லாம் உலர்த்துகின்ற நெருப்பு. கவைஇ - கவித்து. தளிர் தயங்கும் - தளிர் விளங்கப்பெறும். மடங்கல் - யமன். முனை தவ - போரை மிகுதியாக உடைய ‘வேல்’ என்க. அஃதான்று - அதுவன்றி. இதனைச் சடை முதலிய எல்லாவற்றின் பின்னும் தனித்தனிக் கூட்டுக. 761. குறிப்புரை: ‘மாலைப் பிறைக் கீறா’..... போர்பாகா! - என்பதனை முதற்கண் கூட்டியுரைக்க. ‘கீற்றன்’ என்பது இடைக் குறைந்து ‘கீறன்’ என நின்ற விளியேற்றது. வேலை முகடு - கடலின்
|