பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை542

கட்டளைக் கலித்துறை

762.இதுநீர் ஒழிமின் இடைதந் துமையிமை யத்தரிசி
புதுநீர் மணத்தும் புலியத ளேயுடை பொங்குகங்கை
முதுநீர் கொழித்த இளமணல் முன்றில்மென் தோட்டதிங்கள்
செதுநீர் ததும்பத் திவளஞ்செய் செஞ்சடைத் தீவண்ணரே.

6

அகவற்பா

763.வண்ணம்,
அஞ்சுதலை கவைஇப் பவள மால்வரை
மஞ்சுமின் விலகிப் பகல்செகுக் கும்மே,
என்னை?
பழமுடைச் சிறுகலத்(து) இடுபலி பெய்வோள்
நெஞ்சகம் பிணிக்கும் வஞ்சமோ உடைத்தே!
அஃதான்று,
முளையெயிற்றுக் குருளை இன்துயில் எடுப்ப
நடுங்குதலைச் சிறுநிலா விதிர்க்கும் கொடும்பிறைத்(து)
ஏமுறு முதிர்சடை இறைவ
மாமுறு கொள்கை மாயமோ உடைத்தே.

7


உச்சி. விசும்பு அகடு - வானத்தின் நடுவிடம். கை கலந்த காலை - இவை இரண்டும் ஒன்று படும்படி நீ ஒரு தூணாய் நின்ற காலத்தில் நீரை எங்கே கரந்தணை (உள்ளடக்கி வைத்தாய்?). “ஐயோ” என்றது. ‘இதனை அறியாது திகைக் கின்றோம்’ என்னும் குறிப்பினது இறை - சிறிது. “இறைக் கூறாய்” என்பதில் ககர ஒற்று விரித்தல்.

762. குறிப்புரை: “பொங்கு கங்கை” என்பது முதலாகத் தொடங்கி, “இடை தந்து இதுநீர் ஒழிமின்” என்பதை இறுதியில் வைத்து உரைக்க. “புது நீர்” என்பதில் நீர் - நீர்மை; தன்மை. ‘இமையத்தரசியாகிய உமையைப் புதுமணம் கொண்ட பொழுதும் உம்முடைய உடை புலித்தோலாகவே இருந்தது. இது போன்ற தன்மையை அதற்கு ஒரு வாய்ப்புத் தந்து ஒழிப்பீர் என்க. ‘முன்றிலின்கண் உள்ள திங்கள்’ எனவும், ‘திங்களின் மேல் நீர் ததும்புதலால் அத் திங்கள் திவள் அம் (துவளுகின்ற ஓர் அழகைச்) செய்கின்ற (உண்டாக்குகின்ற) சடை’ எனவும் உரைக்க. தோட்ட - பூ இதழ்போல அமைந்த. செது நீர் - அலம்புகின்ற நீர்.

763. குறிப்புரை: “முளையெயிற்றுக் குருளை .... சடை இறைவ” என்பதை முதலிலும், “அஃதான்று” என்பதைச் “செதுக்கும்மே”