பக்கம் எண் :

543சிவபெருமான் திருமும்மணிக்கோவை

வெண்பா

764.உடைதலையின் கோவை ஒருவடமோ கொங்கை
புடைமலிந்த வெள்ளெருக்கம் போதோ - சடைமுடிமேல்
முன்னநாள் பூத்த முகிழ்நிலவோ முக்கணா
இன்னநாள் கண்ட திவள்.

8


என்பதன் பின்னும், “என்னை” என்பதை “உடைத்தே” என்பதன் பின்னுமாகக் கூட்டியுரைக்க.

‘உனது வண்ணம் (நிறம்) உனது ஐந்து தலைகளையும் கவைஇ (மூடி) பவளமால் வரையிடத்துத் தவழும் மஞ்சின் (மேகத்தின்) மின்னல் போல விலகி (இடையிடையே விளங்கி) பகல் ஒளியைச் செகுக்கும். (அழிக்கும்). ‘பழங்கலம், முடைக் கலம், சிறுகலம்’ எனத் தனித்தனி இயைக்க. கலம் - பிச்சைப் பாத்திரம். முடை - முடை நாற்றம் உடையது. இங்ஙன மாயினும் நெஞ்சகத்தைக் கவரும் அதிசயத்தை உடையது. வஞ்சம். இங்கு அதிசயம். இங்ஙனம் ஆகலின் உமது கொள்கை மாயம் உடைத்தாகின்றது. கொள்கை, இங்குத் தன்மை. ஓகாரம் வியப்பு. முறு கொள்கை - முறுகிய (இறுகிய) கொள்கை.

குருளை, பாம்புக் குட்டி அது சீறுதலால் திங்கள் துயிலெழுந்து நடுங்குகின்றது. ‘நடுங்குதலையை உடைய பிறை’ என்க. நடுங்குதலை. ‘தலை நடுங்கல்’ என்றல் வழக்கு. விதிர்க்கும் - வீசுகின்ற. கொடு - வளைந்த, பிறைத்து - பிறையை உடையது. ‘பிறையை உடையதாய் ஏமுறு சடை’ என்க. ஏமுறு - பல பொருள்கட்கும் பாதுகாவலாகப் பொருந்திய.

764. குறிப்புரை: ‘முக்கணா’ என்பதை முதலிற் கொள்க. இவள் - (உன்மேல் வைத்த காதலால் மெலிகின்ற) இவள். இன்ன நாள் - இன்று. கண்டது - உன்பால் கண்டது. மார்பில் உள்ள தலை மாலையையோ? வெள்ளெருக்கம் பூ மாலையையோ? சடைமேல் உள்ள முதல்நாள் தோன்றும் பிறையையோ? என்க. ‘இவற்றுள் ஒன்றேனும் காதலை விளைக்கும் பொருளாய் இல்லையே’ என்பது குறிப்பு. “தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்”1 - என்பதில் தலைவன். தலைவியர் தம்முள் ஒருவரது இழிபை மற்றவர் தேறைமையும் அடங்கும் ஆதலின் இஃது அவ்வாற்றான் ஆய பெருந்திணைத் தலைவியது ஆற்றாமை கூறித் தோழி தலைவனைக் குறையிரந்தது. “கொங்கை” என்பது மார்பைக் குறித்தது. “கண்டது” - எனச் செயப்படுபொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது.


1. தொல் - பொருள் - அகத்திணையியல்.