கட்டளை கலித்துறை 765. | இவள்அப் பனிமால் இமையத் தணங்குகற் றைச்சடைமேல் அவள்அப்புத் தேளிர் உலகிற்(கு) அரசி அதுகொண்டென்னை எவளுக்கு நீநல்ல(து) யாரைமுன் எயிதிற்(று)எற் றேயிதுகாண் தவளப் பொடிச்செக்கர் மேனிமுக் கண்ணுடைச் சங்கரனே. | | 9 |
அகவற்பா 766. | கரதலம் நுழைத்த மரகதக் கபாடத்து அயில்வழங்கு குடுமிக் கயிலை நாடநின் அணங்குதுயில் எடுப்பிற் பிணங்குநிலாப் பிணையல் யாமே கண்டதும் இலமே தாமா மூவா எஃகமும் முரணும் ஓவாது பயிற்றும் உலகம்மால் உளதே. | | 10 |
765. குறிப்புரை: ஈற்றடியை முதலிற் கொள்க. “இவள்” என்றது உமாதேவியைச் சுட்டியதும். “அவள்” என்றது கங்கா தேவியைச் சுட்டியதும் ஆகும். கங்கையை, ‘புத்தேளிர் உலகிற்கு அரசி” என்றது ஆகாய கங்கையாதல் பற்றி. “அது கொண்டு என்னை” என்றது, ‘எவள் உயர்ந்தவள், எவள் தாழ்ந்தவள் என்னும் ஆராய்ச்சியில்லை என்றபடி. எவளுக்கு நீ நல்லது? யாரை முன் எய்திற்று? எற்றே? - என்றது. எவள் உனை விரும்புபவள்? முதலிற் கொள்ளப்பட்டவள் யார்? முன்னர் ஒருத்தியிருக்கப் பின்னர் ஒருத்தியைக் கொண்டது எதற்கு என்றபடி. இவற்றின்பின் ‘என்னும்’ என்பதை வருவித்து, ‘என்னும் இது கா - என்று எழுகின்ற வினா எழாதபடி பார்த்துக் கொள்’ என உரைக்க. ‘இந்த வினா எழுந்தால் உன்னால் விடையிறுக்க இயலாது’ என்பதாம். ‘இருவருள் ஒருத்தி தான் இவனை விரும்புபவள்’ என்றலும் ஒருத்தி முன், மற்றொருத்தி பின் எனக் கூறுதலும், இருவருள் ஒருத்தியை ‘மிகை’ என்றலும் கூடா என்றபடி, ‘சிவபிரான் கொள்வன யாவும் உலக நலத்திற்கு இன்றியமையாமை கருதியே’ என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு. ‘நல்லது’ என்று ‘நல்ல பொருள் என்றபடி. ‘நல்லை’ எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். 766. குறிப்புரை: “குடுமி” என்றது ஆகு பெயராய்ச் சூலத்தைக் குறித்தது. ‘கரதலம் நுழைந்த சூலம்’ என்க. சிவ பெருமான் ஏந்தியுள்ள சூலத்தின் மூவிலைகள் உயிர்களின் அறிவு,. இச்சை, செயல் இவைகளைப் பிணித்துள்ள ஆணவ மலத்தின் சக்தியைப் போக்கும்
|