கட்டளைக் கலித்துறை 768. | கொழுந்திரள் தெண்ணில வஞ்சிநின் கூரிருள் வார்பளிங்கின் செழுந்திரள் குன்றகஞ் சென்றடைந் தால்ஒக்குந் தெவ்வர்நெஞ்சத்(து) அழுந்திரள் கண்டத் தவளப் பொடிச்செக்கர் மேனிநின்றோர் எழுந்திரள் சோதிப் பிழம்பும்என் உள்ளத்(து) இடங்கொண்டவே. | | 12 |
அகவற்பா 769. | கொண்டல் காரெயிற்றுச் செம்மருப்(பு) இறாலின் புண்படு சிமையத்துப் புலவுநாறு குடுமி வரையோன் மருக புனலாள் கொழுந இளையோன் தாதை முதுகாட்டுப் பொருநநின் நீறாடு பொலங்கழல் பரவ வேறாங்கு கவர்க்குமோ வீடுதரு நெறியே. | | 13 |
768. குறிப்புரை: இப்பாட்டிற்கு ‘எங்கள் பெருமானே’ என்னும் விளியை முதற்கண் வருவித்துக் கொண்டு, ‘கூர் இருள், கொழுந்திரள் தெண்ணிலவு அஞ்சி வார் பளிங்கின் செழுந்திரட் குன்றகம் சென்று அடைந்தால் ஒக்கும் நின், தெவ்வர் நெஞ்சத்து அழுந்து கண்டத்துப் (பிழம்பும்) தவளப் பொடிப் (பிழம்பும்), செக்கர் மேனி நின்று எழும் ஓர் திரட் சோதிப் பிழம்பும் ஏன் உள்ளத்து இடம் கொண்ட என இயைத்து உரைத்துக் கொள்க. நிலவு, பெருமான் முடிமேல் உள்ளது. கூர் இருள் - உலகத்தில் மிகுந்துள்ள இருள். திருநீற்றினால் பெருமானது திருமேனி பளிங்கு மலைபோல் உள்ளது. அவனது நீல கண்டம் அம்மலையின் ஒருபுடை புகுந்த இருள் போன்றுள்ளது. பெருமானது திருமேனி அவளை வெறுப்பவர்கள் உள்ளங் களில் அழுந்தி அச்சுறுத்துகின்றது. ‘அழுந்து’ என்பது கடைக் குறைந்து நின்றது. “பிழம்பும்” என்ற உம்மையால் அஃது ஏனைக் கண்டம், பொடி இவற்றுடனும் சென்று இயைந்தது. “உள்ளத்து இடம்” என்னும் ஆறாவதன் தொகையை, ‘நிலத்தது அகலம்” என்பது போல ஒற்றுமைக் கிழமைப் பொருட்டாகக் கொள்க. 769. குறிப்புரை: கொண்டல் - கிழக்கு திசைக் காற்று. ‘இதுவே மழையைத் தரும்’ என்பது தமிழ்நாட்டு வழக்கம். கார் - மேகம். எயிற்று மருப்பு - பல்லாகிய கொம்பு. மின்னல் இவ்வாறு உருவகம் செய்யப்பட்டது. எனவே, மேகத்தை யானையாக உருவகம்
|