பக்கம் எண் :

547சிவபெருமான் திருமும்மணிக்கோவை

வெண்பா

770.நெறிவிரவு கொன்றை நெடும்படற்கீழ்க் கங்கை
எறிதிரைகள் ஈர்த்தெற்ற ஏறிப் - பொறிபிதிர
ஈற்றராக் கண்படுக்கும் இண்டைச் சடைச்செங்கண்
ஏற்றரால் தீரும் இடம்.

14

கட்டளைக் கலித்துறை

771.இடர்தரு தீவினைக்(கு) எள்கிநை வார்க்குநின் ஈரடியின்
புடைதரு தாமரைப் போதுகொ லாம்சரண் போழருவிப்

செய்யாமை ஏகதேச உருவகமாயிற்று. செம்மருப்பு. இல்பொருள் உவமை பற்றி வந்த உருவகம். இறால் - தேன் கூடு “இறாலின் புண்” என்பதையும் “இறாலாகிய புண்” என விரித்து உருவகமாதல் உணர்க. ‘மருப்பால் ஆய புண்’ என உருபு விரித்துக் கொள்க. சிமயம் - சிகரம். ‘மேகமாகிய யானையது எயிறாகிய மருப்பினால் உண்டாகிய இறால் ஆகிய புண் பொருந்திய சிகரங்கள்’ என்றபடி. இயல்பாகப் பொருந்தியுள்ள தேன் அடையை, ‘யானை மருப்பால் உண்டாகிய புண்’ எனச் செய்கையாகக் கூறியது தற்குறிப்பேற்றம். ‘மேகத்தினது எயிறாகிய கொம்பு’ என்றது மின்னலை. ‘மின்னல் அடிக்கடி தோன்ற அதனிடையே தேனடை காணப்படுவது. அம்மின்னலாய் உண்டான புண்போலத் தோன்றுகின்றது’ என்பதாம். சிகரங்களிடை. இறந்த விலங்குகளது முடை நாற்றம் மேற்கூறிய புண்ணின் நாற்றமாகக் கூறப்பட்டவது. “குடுமி” என்பதும் சிகரமே. ‘புண்படு சிகரம் ஆதலின் புலவு நாறு சிகரமாயிற்று’ என்பதாம். இமயமாகிய குடுமியை உடைய உரையோன். இமயமலையனயன். புனலாள் - கங்காதேவி. இளையோன் - முருகன். பொருநன் - வீரன். ‘முதுகாட்டில் செல்லப் பலரும் அஞ்ச, நீ அஞ்சவில்லை’ என்றபடி. வேறாங்கதவர்க்குமோ - வேறுபடுவதாய் இரண்டுபட்டு நிற்குமோ. ‘சிவபெருமானது திருவடியைத் துதித்தலுக்கு வேறாக வீட்டு நெறி ஒன்று உளதோ’ - என்றபடி.

770. குறிப்புரை: நெறி விரவு - ஒழுங்காகப் பொருந்திய ‘மாலை’ எனப் பொருள் தரும். ‘படலை’ என்பது ஈற்று ஐகாரம் தொகுக்கப்பட்டு நின்றது. ஏற்றுதல் - மோதுதல். ஏறி - கங்கையை விட்டுக் கொன்றை மாலை மேல் ஏறி. பொறி பிதிர - புள்ளிகள் விளங்கும்படி ஈற்று அரா - சூல் கொண்ட பாம்பு. ஏற்றர் - இடப வாகனத்தையுடையவர். ‘ஏற்றாராலே’ எனப் பிரிநிலை ஏகாரம் விரித்து, ‘அவராலேதான் இடர் தீரும். ஏனையோராலே தீராது’ - என உரைக்க. இடர். சிறப்பாகப் பிறவித் துன்பம்.

771. குறிப்புரை: “போழருவி” என்பது முதலாகத் தொடங்கி “பவளவண்ணா” என்பதை ஈற்றடியிறுதியில் கூட்டி உரைக்க.