| படர்தரு கொம்பைப் பவளவண் ணாபரு மாதைமுயங்(கு) அடைதரு செஞ்சுடர்க் கற்றையொக் குஞ்சடை அந்தணனே. | | 15 |
அகவற்பா 772. | அந்த ணாளர் செந்தொடை ஒழுக்கமும் அடலோர் பயிற்றும்நின் சுடர்மொழி ஆண்மையும் அவுணர் நன்னாட் டிறைவன் ஆகிக் குறுநெடுந் தானை பரப்பித் தறுகண் மால்விடை அடரத் தாள்நிமிர்ந் துக்க காய்சின அரவுநாண் பற்றி நீயோர் நெடுவரை நெளிய வாங்கிச் சுடுகணை எரிநிமிர்த்துத் துரந்த ஞான்றே. | | 16 |
போழ்தல் நிலத்தை அருவி - ஆற்று வடிவாய் உள்ள கங்கா தேவி. கொம்பை அடைதரு செஞ்சுடர்க் கற்றை பருமாமுதை ஒக்கும் சடை - கங்கையைப் பொருந்தியுள்ள சுடர்க் கற்றையை உடைய, பெரிய முதிர்ந்த கட்டினை ஒக்கும் சடை. முதை - முதிர்ந்த காடு. தீவினைக்கு - தீவினை நிமித்தத்தால். எள்கி - பிறரால் இகழப்பட்டு நைவார்க்குச் சரண் நின் ஈரடியின் தாமரைப் போது காலாம்’ என முடிக்க. சரண் - புகலிடம் ஈரடியின் போது ஈரடியாகிய மலர். இன், வேண்டாவழிச் சாரியை. புடை - பக்கத்திற் பொருந்திய ‘இணைந்துள்ள’ என்றபடி. ‘கொல், ஆம்’ என்பன அசைகள். ‘தீவினையால் வருந்து பவர்க்குப் புகலிடமாகத் தக்கன சிவபெருமானது இணையடிகளே’ என்றபடி. 772. குறிப்புரை: இப்பாட்டிலும் முதற்கண், ‘எங்கள் பெருமானே’ என்னும் விளியை முதற்கண் வருவித்துக் கொண்டு, ‘நீ, அவுணர் நன்னாட்டு இறைவனாகிக் குறுநெடுந் தானை பரப்பிக் காய்சின அரவு நாண் பற்றி ஓர் நெடுவரை நெளிய வாங்கிச் சுடுகணை எரிநிமிர்த்துத் துரந்த ஞான்று (உனது) மால் விடை தாள் நிமிர்ந்து அடர, ஒழுக்கமும், ஆண்மையும் உக்க’ என இயைத்து உரைக்க. அந்தணாளர் செந்தொடை, வேதம். அடலோர் - வீரம் உடையோர். சுடர் மொழி. வரமாக வழங்கிய சொல். அதனால் அவுணர்கள் (திரிபுரத்தவர்) அடைந்த ஆண்மை. அந்த ஆண்மை வீரர் பலராலும் பாராட்டிப் பேசப்பட்டது. ‘பயிற்றும் ஆண்மை’ என இயைக்க. மால்விடை, திருமாலாகிய இடபம். அடர - அது தனது கால்களை நீட்டி உதைக்க. உக்க - சுக்குநூறாகி உதிர்ந்தன. ‘உக்கன’ என்றே பாடம் ஓதுதலும் ஆம். ‘நீ சுடுகணை துரந்ததன்றியும், உனது விடை அடர்ந்ததனாலும் திரிபுரமும், அதன்கண் இருந்தோர் ஆண்மை உருவின்றிச் சிதறி அழிந்தன’ எனச் சிவபெருமானது
|