பக்கம் எண் :

549சிவபெருமான் திருமும்மணிக்கோவை

வெண்பா

773.ஞான்ற புனமாலை தோளலைப்ப நாண்மதியம்
ஈன்ற நிலவோடும் இவ்வருவான் - மூன்றியங்கு
மூதூர் வியன்மாடம் முன்னொருகாலம் துன்னருந்தீ
மீதூரக் கண்சிவந்த வேந்து.

17

கட்டளைக் கலித்துறை

774.வேந்துக்க மாக்கடற் சூரன்முன் னாள்பட வென்றிகொண்ட
சேந்தற்குத் தாதையிவ் வையம் அளந்ததெய் வத்திகிரி
ஏந்தற்று மைத்துனத் தோழனின் தேன்மொழி வள்ளியென்னும்
கூந்தற் கொடிச்சிதன் மாமன்வெம் மால்விடைக் கொற்றவனே.

18


ஊர்தியின் ஆற்றலைப் புகழ்ந்தவாறு. வேத நெறி பிழைத்தமை காரணமாகச் சிவபெருமான் போர் தொடுத்ததை அங்ஙனம் தொடுத்தபின் நிகழ்ந்தது போலக் கூறினார். எனினும், அஃது அதற்கு முன்பே அழிந்தது’ என்பதே கருத்து. இறைவனாகி - ‘யான் இறைவன்’ என்பதைப் புலப்படுத்தி. குறுமை பூதங்களின் உருவம் பற்றியும். நெடுமை மிகுதி பற்றியும் கூறப்பட்டன. “நிமிர்ந்து” என்பதை ‘நிமிர’ எனத் திரிக்க. ‘சுடுகணையால் எரியை நிமிர்த்து அதனைத் துரந்த ஞான்று’ என்க.

773. குறிப்புரை: புனம் - கொல்லை; முல்லை நிலம். அஃது ஆகுபெயராய்க் கொன்றைப் பூவைக் குறித்தது. ‘ஞான்ற மாலை’ என இயையும். ஞான்ற - தொங்கிய. நாள் மதியம் - முதல் நாட் பிறை. இவ்வருவான் - இப்பொழுதே நம்முன் தோன்றுவான். ‘வேந்து வருவான்’ என்க. மூன்றாய் இயங்கும் மூதூர் திரிபுரம். வியல் மாடம் - அவற்றில் உள்ள மாடமாளிகைகள். ‘மாடத்தில்’ என ஏழாவது விரிக்க. “கண் சிவந்த” என்றது. ‘சினந்த’ என்றபடி. ‘இப்பொழுதே வருவான்’ என்றது, தமது அன்பு காரணமாக எழுந்த தெளிவினாலாகும்.

774. குறிப்புரை: “வேம் மால் விடைக் கொற்றவன்” என்பதை முதலில் கூட்டியுரைக்க. ‘முன்னாள் சூரன் வேம் துக்க மாக்கடல் படவென்றி கொண்ட சேந்தன்’ என மாற்றிக் கொள்க. சூரன் இறுதியில் மாவாகி (மாமரம் ஆகி)க் கடல் நடுவில் நின்றான்’ என்பர். அஃது உண்மையன்று. ‘வேகின்ற துக்கமாகிய பெரிய கடல் நடுவில் பொருந்தினான்’ என்பது தான் உண்மை எனச் சொல் நயம்படக் கூறினார். சேந்தன் - முருகன். திகிரி - சக்கரம். ‘தெய்வத் திகிரி ஏந்தல்