அகவற்பா 775. | கொற்றத் துப்பின் பொற்றை ஈன்ற சுணங்கையஞ் செல்வத் தணங்குதரு முதுகாட்டுப் பேய்முதிர் ஆயத்துப் பிணவின் கொழுந!நின் ஏர்கழல் கவைஇ இலங்கிதழ்த் தாமம் தவழ்தரு புனல்தலைப் படுநர் அவல மாக்கடல் அழுந்தலோ இலரே. | | 19 |
வெண்பா 776. | இலர்கொலாம் என்றிளைஞர் ஏசப் பலிக்கென்(று) உலகெலாஞ் சென்றழல்வ ரேனும் - மலர்குலாம் திங்கட் குறுந்தெரியல் தேவர்க்காட் செய்வதே எங்கட் குறும்;தெரியின் ஈண்டு. | | 20 |
என்பது ‘மாயோன்’ என்னும் ஒரு பெயர்த் தன்மைதாய், “அளந்த” என்னும் ஒரு பெயரெச்சத்திற்கு முடிவாயிற்று. ‘வள்ளி என்னும் கொடிச்சி’ எனவும், ‘கூந்தற் கொடிச்சி’ எனவும் தனித் தனி முடிக்க. கொடிச்சி - குறத்தி. 775. குறிப்புரை: கொற்றத் துப்பின் - வெற்றிக்கு ஏதுவான வலிமையை உடையவளும், பொற்றை ஈன்ற - மலையால் (மலையரசனால்) பெறப்பட்டவளும் சுணங்கு அம் செல்வத்து - தேமலின் அழகாகிய செல்வத்தை உடையவளும். (ஐ சாரியை) அணங்கு தரு முதுகாட்டு - அச்சத்தைத் தருகின்ற முதுகாட்டின்கண் வாழ்பவளும். பேய் முதிர் ஆயத்து - பேய்களாகிய முற்றிய சுற்றத்தை உடையவளும் ஆகிய பிணவின் கொழுந - மான்போன்றவளுக்குக் கணவனே. இங்ஙனம் வருணிக்கப்பட்டவள் காடுகிழாள். இவளும் சத்தியின் கூறாதல் பற்றி ‘மலையரையனால் பெறப்பட்டவள்’ என்றார். பொற்றை - மலை. ‘ஒற்றை’ என்பது பாடம் அன்று, ஏர் கழல் - அழகிய திருவடியை. சவைஇ - சூழ்ந்து. தாமம் தவழ் தரு புனல் - பூக்கள் மிதக்கின்ற நீர். தலைப் படுநர் - தங்கள் தலையிலே உறப் பெற்றவர்கள். “அழுந்தலோ” என்னும் ஓகாரம் சிறப்பு. ‘சிவபெருமானுடைய பாத தீர்த்தம் தலையிலே படப் பெற்றவர்களது துன்பங்கள் நீங்கி யொழியும்’ என்பது கூறியவாறு. 776. குறிப்புரை: இளைஞர் - அறிவு முதிரப் பெறாதவர் கள். இலர் என்று ஏச - ‘இவர் யாதொன்றும் இலராகிய நிச்சல் நிரப்புடையர்’ என்று சொல்லி இகழும்படி. தெரியின் - ஆராய்ந்து பார்த்தால். குறுந் தெரியல் - சிறிய மாலைக் கண்ணி. ஈண்டு
|