பக்கம் எண் :

551சிவபெருமான் திருமும்மணிக்கோவை

கட்டளைக் கலித்துறை

777.ஈண்டுமுற் றத்தொற்றை மால்விடை ஏறியை அம்முனைநாள்
வேண்டிமுற் றத்திரிந் தெங்கும் பெறாது வெறுங்கைவந்தார்
பூண்டவொற் றைச்செங்கண் ஆரமும் கற்றைச் சடைப்புனலும்
நீண்டஒற் றைப்பிறைக் கீளும்எப் போதுமென் நெஞ்சத்தவே

21


எங்கட்கு உறும் - இப்பிறப்பில் எங்கட்கு நன்மை தருவதாகும். ‘அறிவு முதிர்ந்தோர் இகழ்தல் கண்டு யாமும் அது செய்யோம்’ என்றபடி.

புத்தரோடு பொறியில் சமணும் புறங்கூற

நெறிநில்லா

ஒத்தசொல்ல உலகம் பலிதேர்ந்து எனது

உள்ளம் கவர் கள்வன்

எனவும்

புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே2

எனவும் ஞானசம்பந்தரும் அருளிச் செய்தார். கோல், ஆம் அசைகள்.

777. குறிப்புரை: ஈண்டு முற்றத்து - ‘இவ்வுலகமாகிய முற்றத்திலே (வெற்ற வெளியான இடத்திலே) முற்றத் திரிந்து’ என இயைக்க. ‘முற்றத் திரிந்து, அம் முனைநாள், விசை ஏறியை எங்கும் பெறாது வெறுங் கை வந்தார்’ என்க. முனைநாள் - முன்னை நாள். பெறாது - காணப் பெறாமல். ‘மாலும். அயனுமாகிய இரு பெருந் தேவர்கள்’ என்பதைச் சொல்லாமற் சொல்லக் கருதி அத்தொடரைத் தோன்றா எழுவாயாக வைத்தார். செங்கண் - சிவந்த கண்; நெருப்புக்கண். ஆரம் - எலும்பு மாலை. ‘செங்கண் என்பதிலும் உம்மை விரித்து, ‘ஒற்றைச் செங்கண்ணும், பூண்ட ஆரமும் - கீளும் எப்போதும் என் நெஞ்சத்தவே’ என இயைத்து முடிக்க. ‘மாலும், அயனும் எத்துணை முயன்று தேடியும் காணப்படாத முதல்வன் என் நெஞ்சத்தில் எப்பொழுதும் குடிகொண்டுள்ளான்’ எனத் தாம் பெற்ற பேற்றிணை வியந்துரைத்தவாறு.


1. திருமுறை - 1.1.10.
2. திருமுறை - 3.4.10