அகவற்பா 778. | நெஞ்சிற் கொண்ட வஞ்சமோ உடைத்தே மடவோர் விரும்புநின் விளையாட் டியல்போ? மருள்புரி கொள்கைநின் தெருளா மையோ? யாதா கியதோ? எந்தை நீதியென்(று) உடைதலை நெடுநிலா வெறியல் கடைதலென் றருளிச் சூடிய பொருளே. | | 22 |
வெண்பா 779. | பொருளாக யானிரந்தால் புல்லெருக்கின் போதும் அருளான்மற் றல்லாதார் வேண்டின் - தெருளாத பான்மறா மான்மறிக்கைப் பைங்கண் பகட்டுரியான் தான்மறான் பைங்கொன்றைத் தார். | | 23 |
778. குறிப்புரை: “எந்தை” என்பது முதலாகத் தொடங்கி, முதல் அடியை இறுதியில் வைத்து முடிக்க எந்தை. விளி, நீதி இங்குத் தகுதியைக் குறித்தது. வெறியல் - மாலை. கடைதல் - மார்பின்கண் அசைதல். உடை தலை மாலை மார்பின்கண் அசைதலைத் தகுதியென்று அருளிச் சூடிய பொருள் விளையாட்டியல்போ? தெருளாமையோ? (இவ்விரண்டுமாய் இருத்தல் இயலாது. ஆகையால்) ஒரு வஞ்சமோ உடைத்து’ என முடிக்க. ‘தலை மாலை சூடிக் கொள்ளுதலை ஒரு விளையாட்டாகக் கருதுதல் மடவோர் இயல்பாகும் என்பார். “மடவோர்விரும்பும் விளையாட்டு” என்றார். தெருளாமையாகிய மருள்புரி கொள்கையோ’ என மாற்றியுரைத்தல் கருத்து என்க. “அருளி” என்றது. ‘உனது செயல்கள் யாவும் அருள் காரணமாகவே நிகழும் ஆதலால் இன்னதோர் அருளைக் கொண்டு’ என்றபடி. பொருள் - கருத்து. பழிப்பது போலப் புகழ்தல் வேண்டி “வஞ்சம்” என்றார் ஆகலின். “ஆழ்ந்தோர் கருத்து” என்பதே அதன் உண்மைப் பொருளாம். ஓகாரம் சிறப்பு. அக்கருத்தாவது, தனது நித்தியத் தன்மையை உயிர்கட்கு உணர்த்துதலாம். 779. குறிப்புரை: “தெருளாத .... பகடுரையான்” என்பதை முதலிற் கொள்க. மறி - கன்று. ‘தெருளாத மறி, பால் மறா மறி’ எனத் தனித் தனி முடிக்க. “தெருளாத” என்றதும், “பால் மறா” என்றதும் குழவிப் பருவத்தைக் குறித்தவாறு. பகடு - யானை. ‘பைங்கண் பகடு’ என்க. பொருளாக - இன்றியமையாப் பொருளாக. மற்று, அசை, அல்லாதார் - யான் தவிர ஏனையோர். ‘பைங்கொன்றைத் தாரையும் தான் மறான்’ என்க. உம்மை தொகுத்தலாயிற்று. மறான் - மறுக்க
|