பக்கம் எண் :

553சிவபெருமான் திருமும்மணிக்கோவை

கட்டளைக் கலித்துறை

780.தாரிளங் கொன்றைநல் ஏறு கடாவித் தலைமைமிக்க
ஏரிள மென்முலைப் பொன்மலை யாட்டிற்கெற் றேயிவனோர்
பேரிளங் கொங்கைப் பிணாவொடுங் கூடிப் பிறைக்கொழுந்தின்
ஓரிளந் துண்டஞ் சுமந்தையம் வேண்டி உழிதருமே.

24

அகவற்பா

781.உழிதரல் மடிந்து கழுதுகண் படுக்கும்
இடருறு முதுகாட்டுச் சீரியல் பெரும
புகர்முகத் துளைக்கை உரவோன் தாதை
நெடியோன் பாகநின்
சுடர்மொழி ஆண்மை பயிற்று நாவலர்க்(கு)
இடர்தரு தீவினை கெடுத்தலோ எளிதே.

25


மாட்டான். இது தூது செல்லுமாறு வேண்டி தலைவிக்குத் தோழி தலைவனது அன்பின்மை கூறி இயற்பழித்தது.

780. குறிப்புரை: “இவன் ஓர்” என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. அங்ஙனம் உரைக்குங்கால் “நல் ஏறு கடாவி” என்பதை “ஐயம் வேண்டி உழிதரும்” என்பதற்கு முன்னர்க் கூட்டுக. “ஓர் பேரிளங் கொங்கைப் பிணா” என்றது கங்கா தேவியை. ‘இவன் இத்தகையனாய் இருத்தலால் தலைமை மிக்க பொன் மலையாட்டிக்கு இவன் தனது கொன்றை மாலையை வழங்கியதனால் என்ன பயன்? என்றபடி. பொன் மலையாட்டி, உமாதேவி. ‘அவரே பெருந் தேவி’ என்றற்கு “தலைமை மிக்க” என்றார்.

781. குறிப்புரை: உழிதரல் மடிந்து . அலைவதினின்றும் ஓய்வு பெற்று. கழுது - பேய். சீர் இயல் பெரும - நடனம் புரிகின்ற பெருமானே. சீர் - தாளம். ‘தாளத்திற்கு இசைய நடனம் ஆடுபவன்’ என்றபடி. புகர் முகத் துளைக்கை உரவோன், யானை முகக் கடவுள். நெடியோன் பாக - திருமாலை ஒரு பாகத்தில் உடையவனே. நின் சுடர் மொழி ஆண்மை - வேதத்தை ஆளும் தன்மை. அஃதாவது, வேத நெறிப்படி உன்னை மனமொழிமெய்கனால் வழிபடுந்தன்மை. “பயிற்றும் - என்பது தன்வினை. பிறவினை இரண்டற்கும் பொதுவாய் நின்றது. ஓகாரம், சிறப்பு.