வெண்பா 782. | எளியமென் றெள்கி இகழாது நாளும் அளியம்ஆட் செய்தாலும் ஐயோ - தெளிவரிய வள்கயிலை நீள்பொருப்ப வான்தோய் மதிச்சடையாய் கொள்கயிலை எம்பாற் குறை. | | 26 |
கட்டளைக் கலித்துறை 783. | குறையாப் பலியிவை கொள்கவென் கோல்வளை யுங்கலையும் திறையாக்கொண் டாயினிச் செய்வதென் தெய்வக்கங் கைப்புனலில் பொறையாய் ஒருகடல் நஞ்சுண்ட கண்டா பொடியணிந்த இறைவா இடுபிணக் காடசெம் மேனியெம் வேதியனே. | | 27 |
782. குறிப்புரை: தனிச் சீரிலிருந்து தொடங்கி, ஈற்றடியை இறுதியில் வைத்து உரைக்க. வள்ளன்மையைக் குறிக்கும் ‘வள்ளல்’ என்பது ஈறு குறைந்து, முதனிலையளவாய் நின்றது. வள்ளன்மையைப் பொருப்பிற்கு ஏற்றினும், பொருப்பற்கு ஏற்றினுயை பொருந்தும். எளியம் என்று ஏற்கி இகழாது - ‘யாம் சிவனுக்கு செய்யும் அளவிற்குத் தகுதியுடையோமே’ என்று எங்களை நாங்களே இகழ்ந்துகொண்டு, அது பற்றி உனக்கு ஆட்செய்தலை ஒழியாது செய்தாலும் நீ எங்கள் பால் உள்ள குறைபாட்டினை கருத்திற் கொள்கின்றாய் இல்லை (கருத்திற் கொண்டு தீர்க்கின்றிலை) என்க. ‘கொள்கையிலே’ என்பது, “கொள்கயிலை எனப் போலியாய் வந்தது. ‘எம்மாற் குறை’ என்பதும் பாடம். அதற்கு, ‘குறை - பணி’ என்பது பொருளாகும். 783. குறிப்புரை: “தெய்வக் கங்கை” - என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. “கடல்” என வருதலால், “பொறை” என்பது கடலில் உள்ள நீரைக் குறித்தது. “ஆகாயத்தில் உள்ள தெய்வக் கங்கையில் தனது நீர் எழுந்து பாய்வதாகிய ஒரு கடல்” என்க. ‘இறைவன்” எனது ‘இறையன்’ எனவும் வருவும். ‘இறையனார்’ என்பதை நினைக. விளியேற்குங்கால் ‘இறைவன்’ என்பது ‘இறைவா’ என வருதல் போல ‘இறையன்’ என்பது. இங்கு “இறையா” என வந்தது. ‘என் பலியாகிய இவைகளைக் கொள்க. இவற்றை விடுத்து என் வளையையும், கலையையும் கொண்டாய், என் செய்வது! என்க. பலி - பிச்சை. இது கைக்கிளைத் தலைவி தலைவனை நெருங்கிக் கூறியது.
|