பக்கம் எண் :

555சிவபெருமான் திருமும்மணிக்கோவை

அகவற்பா

784.வேதியர் பெரும விண்ணோர் தலைவ
ஆதி நான்முகத்(து) அண்ட வாண
செக்கர் நான்மறைப் புத்தேள் நாட
காய்சின மழவிடைப் பாகநின்
மூவிலை நெடுவேல் பாடுதும்
நாவலம் பெருமை நல்குவோய் எனவே.

28

வெண்பா

785.எனவே உலகெலாம் என்றிளைஞர் ஏசு
நனவே பலிதிரிதி நாளும் - சினவேங்கைக்
கார்க்கயிலை நாட களிற்றீர் உரியலாற்
போர்க்கையிலை பேசல்நீ பொய்.

29


784. குறிப்புரை: வேதியர் - நிலத் தேவர்; பூசுரர், விண்ணோர் - வானத் தேவர். நான்முகத்து அண்டம் - பிரமாண்டம். ‘அதன் முழு இடத்திலும் நிறைந்துள்ளாய்’ என்றற்கு “நான்முகத்து அண்டவாண” - என்றார். “நாடு” என்றது உலகத்தை; அது சத்திய லோகம். ‘அது செம்பொன் நிறத்தது’ என்றற்கு, “செக்கர் நாடு” என்றார். விடை திருமால் ஆதலின் “அதன் பாக” என்றதனானே வைகுந்தத்தில் நிறைந்தமை சொல்ல வேண்டாவாயிற்று. நாவல் பெருமை - நாவால் வலியராம் பெருமை. அது தம்மால் மொழியப்படும் மொழிகள் யாவும் நிறைமொழிகளாய்ப் பயன் தருதல். எனவே, ‘அருளாளர்கள் மொழியும் மொழிகள் நிறைமொழிகளாய் நின்ற பயன் தருதல், இறைவனது அருளாற்றல் அம் மொழிகளில் கலந்து நின்று இயக்குதலானே’ என்பது அறியப்படும். “நல்குவோய்” என்பது முற்று.

785. குறிப்புரை: “சின வேங்கைக் கார்க் கயிலை நாட” என்பதை முதலிற் கொள்க. சின வேங்கை - புலி. கார் - மேகம் ‘இவைகளையுடைய கயிலை’ என்க. “நாடு” என்றது, ‘இடம்’ என்றபடி. எனவே இளைஞர் - எடுத்துச் சொல்லப் புகுங்கால் உலகியலில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர்கள் இகழ்ந்தே கூறும்படி ‘(நீ) நாளும் நனவே உலகெலாம் பலிதிரிதி’ என்க. “நனவே” என்றது, “யாவரும் நன்கறியும்படி” என்றவாறு. ‘அதுவன்றி, நீ போர்க்கை களிற்று உரியலால் இலை; ‘அங்ஙனமாக - யான் பேரைசுவரியம் உடையவன் - என்று உன்னை நீயே உயர்த்திப் பேசிக் கொள்ளுதல் வேண்டா’ என்க. ‘ஐசுவரியம் உடையேன்’ எனக் கூறிக்கொள்ளுதல்.