பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை556

கட்டளைக் கலித்துறை

786.பொய்நீர் உரைசெய்தீர் பொய்யோம் பலியெனப் போனபின்னை
இந்நீள் கடைக்கென்று வந்தறி யீரினிச் செய்வதென்னே
செந்நீர் வளர்சடைத் திங்கட் பிளவொடு கங்கைவைத்த
முந்நீர்ப் பவளத் திரட்செக்கர் ஒக்கும் முதலவேன.

30

திருச்சிற்றம்பலம்


‘என் பெயர் ஈசுவரன்; (இன்னும்) மகேசுரன்’ என்று சொல்லிக் கொள்ளுதல். பேசல் - பேசற்க. இனி இதனைத் தொழிற் பெயராக்கி, ‘நீ பேசல் பொய்’ என முடிக்கினும் ஆம். அன்றி, ‘பேசேல்’ எனப் பாடம் ஓதலும் ஆம்.

786. குறிப்புரை: “செந்நீர் வளர்சடை” என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. செந்நீர் - சிவந்த நீர்மை. செந்நிறம். ‘வைத்த முதலவன்’ என இயையும். ‘திரளினது செக்கர்’ என ஆறாவது விரிக்க. “நீர்”. “செய்தீர்”, “அறியீர்” என்பன எள்ளல் பற்றி வந்த பன்மையாகலின் அவை “முதலவனே” என்னும் ஒருமையோடு மயங்கின. “பொய் நீர் உரை செய்தீர்” என்பதை. “செய்வது என்னே” என்பதற்கு முன்னே கூட்டுக. பலி பொய்யோம் - நாள்தோறும் பிச்சைக்கு வருதலைப் பிழையோம். இஃது ஒருநாள் பிச்சைக்கு வந்த இறைவன் கூறியது. அங்ஙனம் கூறியதை நிறைவேற்றாமையால் ‘நீர் பொய் உரை செய்தீர்; செய்வது என்னே’ என்றாள். கடை - தலைவாயில். இது கைக்கிளைத் தலைவி ஆற்றாமையால் தலைவனை எதிர் பெய்துகொண்டு கூறியது. “முதலவனே” என வந்த இதன் இறுதிச் சீர் இதன் முதற் செய்யுள் முதலோடு சென்று மண்டலித்தல் காண்க.

சிவபெருமான் திருமும்மணிக்கோவை முற்றிற்று