வெண்பா 788. | நிலத்துளங்க மேருத் துளங்க நெடுவான் தலத்துளங்கச் சப்பாணி கொட்டும் - கலந்துளங்கொள் காமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்து மாமாரி ஈன்ற மணி. | | 2 |
கட்டளைக் கலித்துறை 789. | மணிசிந்து கங்கைதன் மானக் குருளையை வாளரக்கர் அணிசிந்த வென்றஎம் ஐயர்க் கிளங்கன்றை அங்கரும்பின் துணிசிந்த வாய்ப்பெய்த போதகத் தைத்தொடர்ந் தோர்பிறவிப் பிணிசிந்து கான்முனை யைப்பிடித் தோர்க்கில்லை பேதுறவே. | | 3 |
அகவற்பா 790. | பேதுறு தகையம் அல்லம் தீதுறச் செக்கர்க் குஞ்சிக் கருநிறத் தொக்கன் |
788. குறிப்புரை: தனிச்சீர் முதலாகத் தொடங்கியுரைக்க. காமாரி - காமனை அழித்தவன்; சிவபெருமான். ‘அன்பர்கள் உள்ளத்தில் கலந்து அவற்றை இடமாக் கொள்கின்ற காமாரி என்க. கருமை - பெருமை. கடம் - மதம். தட - பெருமை. ‘தடத்துக் கடம்’ பின் முன்னாக மாற்றியுரைக்க. கடமாகிய மாரி, உருவகம். மணி - இரத்தினம் போலும் பிள்ளை. சப்பாணி கொட்டுதல், குழந்தைகள் தங்கள் இரு கைகளையும் சேர்த்துக் கொட்டும் விளையாட்டு. ‘இச்சிறு பிள்ளையின் சப்பாணி கொட்டுக்கு உலகம் அதிரும்’ என அதன் ஆற்றலை வியந்தவாறு. ‘சக பாணி’, “சப்பாணி” என மருவிற்று. 789. குறிப்புரை: சிவபெருமானுக்கு மகனாகவே கங்கைக்கும்மகன் ஆயினான். மானம் - பெருமை. அரக்கர், திரிபுரத்து அசுரர். அவர்களது அணி படைகள். ‘இளங் கன்று’ என்பதில் இளமை, பருவத்தைக் குறித்தது; குறையைக் குறித்த தன்று. துணி - துண்டு. போதகம் - யானை. தொடர்ந்தோர் - அன்பு செய்தோர். ‘தன்னைத் தொடர்ந்தோர்’ என்க. பிணி சிந்து - நோயை அழிக்கின்ற. கான்முனை - பிள்ளை. பேதுறல் - மயங்கல். “பேதுறல் இல்லை” என்றது. ‘தெளிவு உண்டாகும்” என்றபடி. 790. குறிப்புரை: முதல் அடியை. தீதுறப் பேதுறு தகையமல்லம்’ என மாற்றி இறுதியில் வைத்துரைக்க. “குஞ்சி” என்றது சடையை.
|