| நாப்பண் புக்கவண் இரும்பொறித் தடக்கையும் முரணிய பெருந்தோள் கொட்ட நாவி தேவிதன் மட்டுகு தெரியல் அடிமணந் தனமே. | | 4 |
வெண்பா 791. | மேய உருமிடற்றர் வெள்ளெயிற்றர் திண்சேனை ஒய மணியூசல் ஆடின்றே - பாய மழைசெவிக்காற் றுந்திய வாளமர்க்கண் எந்தை தழைசெவிக்காற் றுந்தத் தளர்ந்து. | | 5 |
‘துவக்கு’ என்னும் வடசொல் ‘தொக்கு’ எனத் திரிந்து வந்தது. ‘தோல்’ என்பது பொருள். தோல். யானைத் தோல். தொக்கன் - அத்தோலைப் போர்த் திருப்பவன். “நாப்பண்” என்றது. ‘அவனுக்கும், உமைக்கும் நடுவில்’ என்றதாம். பொறி - புள்ளி. தடக்கை - வளைந்த கை - தும்பிக்கை. முரணிய - மற்றைக் கைகளோடு மாறுபட. “கொட்ட” என்பதன்பின், ‘விளங்கும்’ என ஒரு சொல் வருவிக்க, ‘நாபி’ என்னும் வடசொல் ‘நாவி’ எனத் திரிந்து வந்தது. நாபி - கொப்பூழ். அஃது ஆகு பெயராய் வயிற்றைக் குறித்தது. ‘வயிறு’ என்னும் விதப்பால் ‘பெருவயிறு’ என்பது பெறப்பட்டது. தே - கடவுள். ‘தேவாகிய இதன் அடி மணந்தனம்’ என்க. தே, சொல்லால் அஃறிணையாதலின். “இதன்” என்றார். மட்டு உகு தெரியல் - தேனைச் சிந்துகின்ற பூமாலை. மணந்தனம் - கூடினோம். அதனால் ‘தீது அடைதலால் பேதுறு தகையமல்லமாயினோம்’ என்க. பேதுறல் - வருந்தல். ‘அல்லது’ என்பது பாடம் அன்று. 791. குறிப்புரை: ‘வாளமர்க்கண், பாய மழை செவிக் காற்று உந்திய, எந்தை தழை செவிக் காற்று உந்த, மேய.... திண் சேனை தளர்ந்து ஓய ஊசலாடின்று’ என இயைத்துக் கொள்க. உரும் - இடி. அஃது அதனோடு ஒத்த ஓசையைக் குறித்தது. “எயிறு” என்றது கோரப் பல்லை. சேனை, கயமுகாசுரனுடன் வந்தது. ஓய - போரை ஒழியும்படி மணி ஊசல் - அழகிய ஊசல் போல, “ஆடின்று” என்பதில் ‘இன்’ என்பதன் ஈற்று னகர மெய் றகர மெய்யாய்த் திரியாதே நின்றது; இது முற்கால வழக்கு. “மழை செவி” என்பதில் ‘செவ்வி’ என்பது இடைக்குறையாய் வந்தது. சகர ஒற்றுத் தொகுத்தல். பாய - பரவிய. ‘பரவிய மழைச் செவ்வியை உண்டாக்கும் இயற்கைக் காற்றை வென்ற எந்தையது தழை செவிக்காற்று உந்தியதனாலே சேனை தளர்ந்து ஓய ஊசலாடின்று’ என முடிக்க.
|