பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை560

கட்டளைக் கலித்துறை

792.உந்தத் தளரா வளைத்தனம் முன்னம்மின் ஒடைநெற்றிச்
சந்தத் தளரா ஒருதனித் தெவ்வர்தம் தாளிரியூர்
விந்தத் தளரா மருங்குற் கிளிபெற்ற வேழக்கன்றின்
மந்தத் தளரா மலர்ச்சர ணங்கள் வழுத்துமினே.

6

அகவற்பா

793.மின்னெடுங் கொண்டல் அந்நெடு முழக்கத்து
ஒவற விளங்கிய துளைக்கைக் கடவுளை
யாம்மிக வழுத்துவ தெவனோ அவனேல்
பிறந்ததிவ் வுலகின் பெருமூ தாதை
உரந்தரு சிரமரிந் தவற்கே வரைந்தது
மேருச் சிமையத்து மீமிசை
வாரிச் செல்வன் மகள்மகன் மொழியே.

7


792. குறிப்புரை: ஊர் விந்தத்தள் - தனது இருப்பிடமாக விந்த மலையைக் கொண்டவள்; துர்க்கை - இவள் உமாதேவியின் கூறாதல் பற்றி ‘முருகனை இவளுக்கு மகன்’ எனக் கூறுதல் போல, மூத்த பிள்ளையாரையும் ‘இவளுக்கு மகன்’ என்றார். அரா மருங்கு - பாம்பு போலும் இடை. ‘இவள் பெற்ற’ என்பதன்பின் “ஓடை நெற்றிச் சந்தம்” என்பதையும், “தாள் இரி” என்பதையும் கூட்டி, வேழக் கன்று” என்பதற்கு அடையாக்குக. உந்த - வெளிப்படுத்த. தளரா வளைத்தன - தளர்ச்சியடையாது எல்லாப் பொருள்களையும் உள்ளடக்கு வனவாகிய ஒளிக்கதிர்கள். முன்னம் மின் ஓடை நெற்றிச் சந்தம் - முன்னே மின்னுகின்ற பட்டத்தையுடைய நெற்றியின் அழகு. தனித் தெவ்வர் தம் தாள் இரி - ஒப்பற்ற பகைவரது முயற்சிகளைப் பின்னிட்டு ஓடும்படி ஒட்டிய. மந்தம் - மெல்ல நடக்கின்ற. (ஆயினும்) தளரா - மெலிவடையாத சரணங்கள் (பாதங்கள்) என்க. வழுத்துதல் - துதித்தல். “வழுத்துமின்” என்றது, “வழுத்தினால்” எந்நலமும் பெறுவீர்’ என்னும் குறிப்பினது.

793. குறிப்புரை: மேகத்தின் முழக்கம் போலும் முழக்கத் துடன் என்றும் ஒரு பெற்றியனாய் விளங்கும் யானைமுகக் கடவுளை (எமக்கு அருளவேண்டி) யாம் மிகவும் துதிக்க வேண்டுவதில்லை. ஏனெனில், அவன் பிறந்தது. இவ்வுலகம் முழுவதையும் படைத்தவனது அகங்கரித்த தலையை அரிந்தவனுக்கு. எழுதியது, மேருமலையாகிய ஏட்டில் வலைஞர் தலைவன் மகளுக்கு மகனது மொழியை - என்பது இதன் திரண்ட பொருள். ‘தந்தையது ஆற்றல் இவனிடத்தும் உளதாதலும், வலைஞர் தலைவன் பெயரன்