பக்கம் எண் :

561மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை

வெண்பா

794.மொழியின் மறைமுதலே முந்நயனத் தேறே
கழிய வருபொருளே கண்ணே - செழிய
கலாலயனே எங்கள் கணபதியே நின்னை
அலாலையனே சூழாதென் அன்பு.

8

கட்டளைக் கலித்துறை

795.அன்பு தவச்சுற்றத்(து) ஆரழல் கொண்டெயில் மூன்றெரிய
வன்புத வத்துந்தை மாட்டுகின் றான்மதஞ் சூழ்மருப்பிற்
கன்பு தவக்கரத் தாளமிட் டோடிக் கடுநடையிட்(கு)
இன்பு தவச்சென்று நீயன்று காத்த தியம்புகவே.

9


சொல்லத்தான் ஏடுஎழுதுவோனாய் இருந்து எழுதிய அருளாளன் ஆதலாலும், ஆற்றலும் அருளும் ஒருங்குடையோர் தம்மையடைந்த எளியவர்க்கு இரங்கியருளல் இயல்பாதலும் யாம் ‘உமக்கு அருளுக’ என மிகவும் வேண்ட வேண்டுவதில்லை. அவனேயருளுவன் என்பதாம். வலைஞர் தலைவன் மகளுக்கு மகன் வியாத முனிவன்; அவன் மொழி மகாபாரதம். ‘மகா பாரதத்தை வியாத முனிவன் சொல்ல, விநாயகப் பெருமான் சிவபெருமானது ஆணையின் வண்ணம் தாம் முன்பே ஒடித்து வைத்திருந்த தந்தத்தை எழுத்தாணியாகவும், மகாமேரு மலையை ஏடாகவும் கொண்டு எழுதினார் என்பது இவ்விதிகாச வரலாறு.

794. குறிப்புரை: மறைமொழியின் முதல், பிரணவம். விநாயகர் பிரணவ வடிவாய் உள்ளவர். ‘அவர் தோன்றியதே பிரணவத்திலிருந்து’ என்பது வரலாறு.1 ‘மறை மொழியின் முதலே’ என மாற்றியுரைக்க. முந் நயனம் - மூன்று கண். ஏறு - ஆண் சிங்கம். கழிய வரு பொருள் - பாசங்கள் யாவும் நீங்கிய பின் கிடைக்கும் பொருள்; முதற் கடவுள். கண்ணே - எங்களுக்குக் கண்போல இருந்து எல்லாவற்றையும் அறிவிப்பவனே. செழியகலாலயனே - பொருள் நிறைந்த கலைகளுக்கெல்லாம் இருப்பிடமாய் உள்ளவனே.

795. குறிப்புரை: அன்பு தவச் சுற்றம் - அன்பை மிகுதி யாக உடைய சுற்றம்; அது தேவர் குழாம். ‘அசுரர்கள் அன்பில்லாதவர்கள்’ என்பது கருத்து. சுற்றத்து - சுற்றத்தால்; சுற்றம் காரணமாக. ‘எரிய மாட்டுகின்றான்’ என இயையும். ‘மாட்டுகின்றான்’ என்றது இறந்த காலத்தில் நிகழ்காலம். எனவே, ‘அன்று மாட்டுகின்றான்’ என்றபடி. மாட்டுகின்றான் - எரிகின்றான். வன்பு தவத்து - வலிமை


1. காஞ்சிப் புராணம் - வலம்புரி விநாயகப் படலம்.