அகவற்பா 796. | கவவுமணிக் கேடகக் கங்கணக் கவைவல்நா அறைகழல் அவுணரொடு பொருத ஞான்றுநின் புழைக்கரம் உயிர்த்த அழற்பேர் ஊதை வரைநனி கீறி மூரி அஞ்சேறு புலர்த்தும் என்பர் மஞ்சேறு கயிலை மலைகிழ வோயே. | | 10 |
மிகுதியால் மாட்டுகின்றான் என்க. அன்று நீ காத்தது இயம்புக - அது பொழுது (வலிமை மிகுந்த) நீ அவனுக்கு என்ன உதவி செய்தாய்? சொல்லுக. ‘தந்தை போரில் ஈடுபடும்பொழுது மைந்தர் அவனுக்கு உதவ வேண்டுவது முறைமையன்றோ’ என்றபடி ‘நீ அன்று அவனுக்கு உதவியது, அவனுடைய தேரினது அச்சை முறித்தது தானோ’ எனக் குறிப்பால் பழித்தவாறு, இது பழித்தது போலப் புகழ்ந்தது. ‘யாவர்க்கும் முதல்வனாகிய சிவபெருமானது தேரின் அச்சையே நீ முறித்து விட்டாய்’ என்றால், உனது ஆற்றல் முன் பிறர் ஆற்றல் என்னாம் என்பதாம், கன் புதவம் - கல்லால் ஆகிய கோபுர வாயிற் கதவு. ‘புதவின்கண்’ என ஏழாவது விரிக்க. அரசர்கள் பகைவரது ஊரை முற்றுகையிடும்பொழுது அவர்களது கோட்டை வாயிற் கதவுகளை யானைகளை ஏவி உடைக்கச் செய்வது வழக்கம். அம்முறையில் நீயே வலிய யானையாய் இருத்தலால் திரிபுரத்தசுரன் கோட்டை வாசலின்மேல், “கரத் தாளமிட்டுக் கடுநடையிட்டு ஓடி இன்பு உதவச் சென்று மருப்பின் உதவியது உண்டோ’ என்பதும் உடன் கூறியவாறு. மருப்பு - தந்தம். 796. குறிப்புரை: ஈற்றடியை முதலிற் கொண்டு உரைக்க. மஞ்சு - மேகம். தந்தையது பொருள் தனயர்க்காதல் பற்றி விநாயகப் பெருமானை, “கயிலை மலை கிழவோன்” என்றார். உனது கேடகமும், கங்கணக்கவையும், வல் நாவும் அவுண ரோடு பொருத ஞான்று என்க. கவவு மணி - முற்றிலும் நிறைந்த இரத்தினம். கேடகம் - வாளோடு ஏந்தும் பலகை. பூணினை, “கங்கணம்” என்றார். கவை - பிளவு. அது தந்தத்தைக் குறித்தது. வல் நா - வலிய நாக்கு. பகைவரை யானை தனது தந்தத்தால் குத்தும் பொழுது அதன் நாவும் அவர்களுக்கு ஊறு விளைவிக்கும். அவுணர் - கயமுகாசுரன் படைஞர். அழல் - வெப்பம். பேரூதை - பெருங்காற்று. மூரிச் சேறு - பெருஞ்சேறு; என்றது, கடலின் அடியில் உள்ள சேறு. என்பர் - என்ற அறிந்தோர் கூறுவர். பிள்ளையாரது வலிமையை விளக்கியவாறு.
|