கட்டளைக் கலித்துறை 801. | பெற்றமெல் லோதி சிலம்பின் மகள்பெறப் பிச்சுகந்த மற்றவள் பிச்சன் மயங்கன்முன் னோன்பின் னிணைமைமிகக் கற்றவன் ஐயன் புறங்காட் டிடைநடம் ஆட்டுகந்தோ செற்றவெண் தந்தத் தவன்நம்மை ஆட்கொண்டு செய்தனவே. | | 15 |
அகவற்பா 802. | செய்தரு பொலம்படை மொய்தரு பரூஉக்குருளை வெள்ளெயிறு பொதிந்த வள்ளுகிர்த் திரள்வாய்ப் பெருந்திரட் புழைக்கை மண்முழை வழங்கும் திண்முரண் ஏற்றின் பனையடர்ப் பாகன் றனதி ணையடி நெடும்பொற் சரணம் ஏத்த இடும்பைப் பௌவம் இனிநீங் கலமே. | | 16 |
801. குறிப்புரை: தன்னைப் பெற்ற மெல்லோதி. மெல் ஓதி - மெல்லிய கூந்தலை உடையவள். “சிலம்பின் மகள்” என்றது, ‘மலைவாழ் சாதியினள்’ என இகழ்ச்சி தோன்றக் கூறியது. மற்று, வினைமாற்று. பெற அவள் பிச்சு உகந்த பிச்சன் - தன்னைப் பெறுவதற்கு அவள் தன் கணவனாகப் பெரிதும் விரும்பப்பட்ட பித்தன். மயங்கல் முன்னோன் - பித்துக் கொள்ளியான முதியோன். (ஆயினும் அவன்) பின் இளைமை மிகக் கற்றவன் - நடனம் ஆடுதலில் வல்லவன். ஐயன் - யாவர்க்கும் தலைவன். அவன் புறங்காட்டிடை ஆடுதலையே விரும்புகின்ற காரணத்தால்தானோ, செற்ற வெண் தந்தத்தவன் (ஒடிக்கப்பட்ட தந்தத்தை உடையவன்) எங்களை இறவா நிலையினராகச் செய்தன! ‘தன் அடியவர்களைப் புறங்காடு அடையாவகை செய்து, ‘தன் தந்தை புறங்காட்டு ஆடுதலைத் தவிர்க்க நினைத்தான் போலும்! என்றபடி. நடனங்களில் சில வகைகள் இணைந்து ஆடுவனவாகவும் இருத்தலின் “இணைமை” என்றார். ‘உகத்தலால்’ என்பது ‘உகந்து’ எனத் திரிந்தது. “அஃது ஆற்றாது - எழுவாரையெல்லாம் பொறுத்து”1 என்பதிற்போல. 802. குறிப்புரை: பொலம் படை - பொன்னால் செய்யப் பட்ட அணிகலக் குழாம். (‘ஐம்படைத் தாலி’ என்றல் பொருந்தாது.) கூர்மை நோக்கித் தந்தத்தை ‘உகிர்’ என்றார். யானையின் வாயில் சிறு பற்கள்
1. திருக்குறள் - 1032
|